பிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

பிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு


பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில், ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்திருந்தும், 3 க்கு 2 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், தேர்வுத்துறை மறுமதிப்பீடு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
டி.கல்லுப்பட்டி பாண்டியன் தாக்கல் செய்த மனு: என் மகள் பவித்ரா. பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில் 15 வது கேள்விக்கு சரியான விடையளித்திருந்தார்.இதற்கு முழு மதிப்பெண் 3 க்கு பதில், 2 மதிப்பெண் வழங்கியுள்ளனர். முழு மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பவித்ராவைஅனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.ஆர்.கண்ணன் ஆஜரானார்.நீதிபதி: விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் பிரச்னை இருந்தால், அரசு தேர்வுத்துறைக்குத் தான் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக ஐகோர்ட்டை நாடக்கூடாது. மனுதாரர் மகள், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர், தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில், மறுமதிப்பீடு செய்ய வேண்டும், என்றார்.

2 comments:

  1. ஐயகோ இந்த கரி கர சுதன் இம்ச தாங்கிக முடியல சாமிகளா ... பெருசோய் ... பிரபாகரன் 84 பாஸ் நீ 70 பெயிலு ... இது கூட தெரியாம இங்க வந்து பல்பு யாவாரமா பாக்குர .. நீ தான கமுதி தங்க கவசத்துக்கு ஜால்ரா அடிச்சது .... 70 மார்க் வாங்கி பெயிலா போன பங்கர் வாயன் நீ எங்களை பிச்ச னு சொல்லுரியா ?? பி ம் பதவி ஏற்பு அன்று " இந்தியா இந்துக்களுக்கே " னனுனு கடுப்பு ஏத்துனது நீயா ???

    ReplyDelete
  2. ஐயகோ இந்த கரி கர சுதன் இம்ச தாங்கிக முடியல சாமிகளா ... பெருசோய் ... பிரபாகரன் 84 பாஸ் நீ 70 பெயிலு ... இது கூட தெரியாம இங்க வந்து பல்பு யாவாரமா பாக்குர .. நீ தான கமுதி தங்க கவசத்துக்கு ஜால்ரா அடிச்சது .... 70 மார்க் வாங்கி பெயிலா போன பங்கர் வாயன் நீ எங்களை பிச்ச னு சொல்லுரியா ?? பி ம் பதவி ஏற்பு அன்று " இந்தியா இந்துக்களுக்கே " னனுனு கடுப்பு ஏத்துனது நீயா ???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி