விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: 3 மாதத்தில் தேர்வு முடிவுகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: 3 மாதத்தில் தேர்வு முடிவுகள்.


டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடி வுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 14ம் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் 243 மையங்களில் 3,628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். 2 லட்சத்து 45 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுத வரவில்லை.இந்நிலையில் விஏஓ எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி தனதுஇணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpsc exams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் வருகிற 24ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இது குறித்து டி.என்.பி. எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபணைஇருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

1 comment:

  1. Group2 interview post exam mudindhu 7 months aayiduchi.... eppo result nu...theriyala...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி