500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரிலிருந்து 500 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளும் புதன்கிழமையே வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நேரடியாக நிரப்பப்படும்.

28 comments:

  1. When will be the PG Trb final result relised ....what about cases against PG Trb. ...If anyone knows kindly update it ....

    ReplyDelete
  2. FLASH NEWS : RANK/FINAL LIST RELEASED SOON.

    ReplyDelete
  3. HAPPY NEWS FOR TNTET 2013 : SELECTION SOON .........

    ReplyDelete
  4. டி.ஆர்.பி., ஏற்க மறுத்த பாடத்தை மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு -

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1006356

    ReplyDelete
    Replies
    1. Bharathi Sir TRB Yerkamarutha Padam Detail sollunga

      Delete
    2. திண்டுக்கல் : ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளது.
      திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலை கல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர். இந்த பாடம் படித்த 100 பேர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களுக்கு பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி., விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை இல்லை என்று கூறி, ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி., மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பாடப்பிரிவை மாற்றியமைக்க எம்.வி.எம்., அரசு கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கல்லூரி முதல்வர் பத்மலதா கூறியதாவது: எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளாக பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடம் இருந்து வருகிறது. தற்போது, டி.ஆர்.பி., ஏற்க மறுத்துள்ளதால், அதனை பி.எஸ்.சி.,விலங்கியல் பாடமாக மாற்றியமைக்க கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஏற்கனவே படித்தவர்கள் பாதிக்காத வகையில், பி.எஸ்.சி.,விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி.,விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை வெளியிடவும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், என்றார். விலங்கியல் தொழிற்கல்வி துறைத்தலைவர் பவானி உடனிருந்தார்.

      Delete
  5. That madam said final list only july 2 week release. Dnt belive anything

    ReplyDelete
    Replies
    1. என்ன இளஞ்சேரலே ....
      நேற்று ஈளஞ்சேரனை பார்த்தீர்களா ??

      Delete
    2. என்ன ராம் அது உங்க வேலையா?

      Delete
    3. உண்மையை உமக்கு உணர்த்தவே உமது புகைப்படம் & பெயரை பயன்படுத்த வேண்டியதாயிற்று ..
      தானே குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் எனக்கு இல்லை நண்பரே .. இப்போதும் அந்த தலைப்பின் கீழ் ராம் ராம் என வரும் அனைத்து புரோபைல் ஓப்பன் செய்து பாருங்கள் ... என கடைசி எண்கள் - 50430-- அங்கு இன்னொரு எண்ணும் வரும் .. 80288--- அது பவி உடையது ... அதனால் தான் அன்று பிரச்சினை வந்ததே ...

      நான் உங்கள் பெயரில் தவறான தகவல்களை வெளியிடும் போது உம் மனம் மகிழ்ந்ததா ???

      பவி உங்களிடம் நேற்றே கேட்டேன் .. என் சவாலில் வென்ற உமக்கு என்ன பரிசில் வேண்டும் ???

      Delete
    4. என்ன இளஞ்சேரலே ....
      நேற்று ஈளஞ்சேரனை பார்த்தீர்களா ??

      Delete
  6. 2013 la tet exam august thane.octobarla yar ezuthina?

    ReplyDelete
  7. Trb senna 20 day indroda
    Mudiyudu

    ReplyDelete
  8. final list will not come this month so do not listen any rumor ok and this year exam may be doubt .i think this rumor spread by some coaching centre

    ReplyDelete
  9. friday unnavirathatthuku ponathu enna achu?any news?

    ReplyDelete
  10. hai bharathi sir pg case ennachu. any news

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி