அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம்


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது: தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட் டது. மத்திய அரசுஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன அறிக்கைபடி இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65ஆக உள்ளது.

தற்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால்,ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம் உள்ளவர்களின் சேவை தேவை. அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது.இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படும். அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வுபெறும்போது சொந்த வீடு இருக்க வசதி செய்யப்படும். மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை செய்யப்படும். இவை அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நாட்கள் விடுமுறை நாட்களாக கருதப்படும் என்றார் அவர். அதைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

* மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக கடந்த 1998ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

* இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65 ஆக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

* ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்களின் சேவையை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

* அரசும் ஊழியர்களும் புதிய மாநிலமான ஆந்திராவின் முன்னேற்றத்துக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

* அரசு துறையிலும் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை என்ற கொள்கை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.

* அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் மசோதா விவாதம் இன்றி ஏகமனதாகநிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி