கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

'எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர் பணிநிரவல், ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கவுன்சிலிங், நேற்று துவங்கி, ஜூன் 29 வரை நடக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் ஒப்புதலோடு, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைகல்வி அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் செய்தனர். அதற்கான ஒப்புகை சீட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இக்கவுன்சிலிங்கை எந்த குளறுபடியும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்தபோதே, அவர்களது பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியிடம், மாறுதல் கேட்கும் மாவட்டம், என்ன காரணம் என்பன போன்ற பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்து, அவர்களிடம் பிரின்ட் அவுட் தரப்பட்டது. அதில் பிழை இருந்தால் திருத்தி, சரியான விபரங்களுடன், அவர்களது விண்ணப்பம் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிபாரிசின் அடிப்படையில் வேண்டியவர்களுக்கு மட்டும் கேட்ட இடம் ஒதுக்கப்பட்டதாக, இதில் புகார் எழவாய்ப்பில்லை. எனினும், குளறுபடியின்றி கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் உத்தரவு வழங்க, பள்ளிகல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

2 comments:

  1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
    வாழ்த்துக்களை வலை தளத்தில் பதிவு செய்த நீங்கள்,,
    பங்களிப்பை நேரில் மட்டும் அளியுங்கள் தோழர்களே !!!
    நமது நியாயமான கோரிக்கைகளுக்காக நாம் நடத்தவிருக்கும் உண்ணா விரதத்தில்
    அனைவரும் கலந்து கொண்டு நமது நிலையை அரசுக்கு தெரியப்படுத்துவோம்.
    நமது கையில் இருக்கும் கடைசி ஆயுதம் இது மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    அனைவரும் பங்கு பெறுங்கள் , அனைவரையும் பங்கு பெறச் செய்யுங்கள் ....
    வெற்றி நமதே !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி