பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை செயலர் புதிய தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை செயலர் புதிய தகவல்

''பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது.இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தேர்வு முடிவு, பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், டாக்டர்கள் உட்பட பலர், தேர்வு முடிவை விமர்சித்துஉள்ளனர்.

மாணவர்கள், அதிக மதிப்பெண் குவித்ததால், பொறியியல், 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 11 மாணவர்கள் மட்டுமே, 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு 200 எடுத்தனர்.

கடும் போட்டி:ஆனால், இந்த ஆண்டு, 271 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுவிட்டனர். மேலும், 'ரேண்டம்' எண் பயன்பாடும், 24ல் இருந்து, 124 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், கலை, அறிவியல் கல்லுாரிகளில், முக்கிய பாடப் பிரிவுகளில் சேர, கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள், முதல் மற்றும் இரண்டாவது, 'குரூப்' பெறுவதிலும், கடும் போட்டி நிலவுகிறது.பொதுத் தேர்வு தேர்ச்சி அதிகரிப்பும், அதிக மதிப்பெண் குவிப்பும், பல நிலைகளில், தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது:

தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய சராசரியாக உள்ளது.

தமிழகத்தில், 1:26 என்ற நிலை உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு களில், 1:35க்கு பதிலாக, 1:27 என்ற நிலையும், 9 முதல், பிளஸ் 2 வரை, 1:40 என்பதற்கு பதில், 1:28 என்ற நிலையும், தமிழகத்தில் உள்ளது.

கூடுதல் கவனம்:ஆசிரியர் - மாணவர் சதவீதம் குறைவு காரணமாக, மாணவர்கள் மீது, ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பினோம்.கடந்த, 2012ல், பல்வேறு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களாக இருந்த, 10 ஆயிரம் பேரை, பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு மாற்றினோம். இது, கடந்த பொதுத் தேர்வில், நல்ல பலனைத் தந்துள்ளது.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.- நமது நிருபர் -

6 comments:

  1. அப்போ 2013 காலி இடங்களை நிரப்பினால் இன்னும் தேர்ச்சி விகிதம் கூடும் தானே சீக்கிரம் போஸ்டிங்க் போடுங்க

    ReplyDelete
  2. Ivangaluku ithu than veley mathi mathi pesurathu

    ReplyDelete
  3. Ivangaluku ithu than veley mathi mathi pesurathu

    ReplyDelete
  4. general counselling mudium munner case mudicha nalladhu. g.c mudincha pirakavathu pg post poduvangala?.kandippa podanum.namma feelingsa cm amma purindhu viraindhu seyalpadanum nu
    kettukolgeren.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி