மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக, 2.3.2011ல், இப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, 104 பட்டதாரி மற்றும் 35 முதுகலை ஆசிரியர்கள், பள்ளிக் கல்விக்கு மாறும் வாய்ப்பு கிடைத்து, 3 ஆண்டுகளாகியும் அந்த உத்தரவை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதில், சிலர் கோர்ட்டை நாடி சிறப்பு மாறுதல் பெற்றுள்ளனர். மீதமுள்ள 139 ஆசிரியர்கள் தொடர்ந்து போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கவலையில் உள்ளனர்.

முதுகலை பட்டதாரி கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. ஆனால், 2004 முதல் பணி நியமனம் பெற்ற இப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை துறைமாறுதல் 'கவுன்சிலிங்' நடக்கவில்லை. பல ஆண்டுகளாக குடும்பம் ஓரிடம், பணி வேறிடம் என்ற நிலையில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து போராடி 2011 அரசு உத்தரவை பெற்ற பிறகும், பல வகையிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளன. தற்போது, நடக்கும் பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' உடன், 139 பேருக்கும் சிறப்பு துறை மாறுதல் 'கவுன்சிலிங்' கையும் கல்வி துறை அறிவித்து, மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டால், ஜூலை 2 வது வாரத்தில், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்

3 comments:

  1. TET CASE FOR AGAINST NEW GO

    மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

    Reply

    ReplyDelete
  2. ஆரம்பிக்கப்பட்டது .....

    மறுபடியும் முதல்ல இருந்தா.....

    ReplyDelete
  3. 2014 tet exam only aplicabable for ug trb exam . it means go will not change in previous rules .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி