மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2014

மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான்.

அவர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தமிழை ஒரு கட்டாயப்பாடமாக்குவது கூடாது என்று வாதிடுகின்றனர். அவர்கள் வாதம் இதுதான்: கேரள மாநிலத்தை அடுத்துள்ள கோவை நகரில் மலையாளிகள் நிறையபேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மலையாளம் படிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஓசூர் பகுதியில் உள்ள பள்ளிகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளை காட்டுகின்றனர். திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர்களின் பலரது குழந்தைகளுக்கு தெலுங்கு தாய்மொழி என்கின்றனர். இதேபோன்று மதச் சிறுபான்மையினர் உருது, சம்ஸ்கிருதம் ஆகிய பாடங்களை தமிழுக்கு மாற்றாக வைக்கின்றனர்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை குழந்தைகளின் தாய்மொழியாக இருக்கும்பட்சத்தில், இந்தப் பள்ளிகள் ஏன் தமிழ்நாடு கல்வி வாரியத்துடன் இணைந்திருக்க வேண்டும்? மலையாள பள்ளிகள் கேரள கல்வித்துறையுடனும், கன்னடப்பள்ளிகள் கர்நாடக மாநில கல்வித் துறையுடனும், தெலுங்கு மொழிப் பள்ளிகள் ஆந்திர கல்வித் துறையுடனும் இணைவு பெற்று, அவர்களது பாடத்திட்டத்தின்படி பயிற்றுவிக்கலாமே, அதில் என்ன தடை?இதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள மதச் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் கூடாது என்ற நிலைப்பாடு சரி என்றால், அவர்கள் மதரஸாக்களில் சேர்ந்து ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் உருது மொழியில் படிப்பதில் என்ன தடை? ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களை சம்ஸ்கிருதத்தில் படிப்பதில் என்ன தடை?இந்தி மொழி தேவை என்று விரும்புவோர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தேர்வு செய்வதில்லையா? அதுபோல், அவரவருக்கு விருப்பமான மொழிக்கான பள்ளிகளைத் தேர்வு செய்துகொள்ளட்டுமே!

இவ்வாறாக பள்ளிகளை மொழிவாரியாக, மதவாரியாக பிரிக்கவும் செய்யாமல், தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு சட்ட விதிவிலக்கைப் பயன்படுத்தி, அனைத்து முன்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிப் பாடநூல்களை ஆங்கில வழியில் சொல்லித் தர வேண்டிய அவசியம் என்ன?முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்பதோடு, கணிதம், சமூகவியல், அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு பாடங்களைத் தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லையே, எதனால்?ஆங்கிலவழிக் கல்விதான் உயர்கல்விக்கு உதவும் என்ற விஷவிதை முதலில் தூவப்பட்டது.ஆனால் இவர்கள் ஆங்கிலத்தையும் முறைப்படி கற்றுத்தரவில்லை. தமிழ்மொழி கட்டாயம் என்பதையும் ஏற்க மறுத்து, மதிப்பெண் அதிகம் பெறும் வழிகளில் ஒன்றாக சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் (எந்த வகையில் தாய்மொழியோ?) சொல்லித் தரவும்செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வசிக்கும் கேரளத்தவர், கன்னடியர், தெலுங்கர்களும், தங்கள் குழந்தைகள் உருது பயில வேண்டும் என விரும்பும் இஸ்லாமியர்களும், சம்ஸ்கிருதம் பயில வேண்டும் எனக் கருதும் இந்துக்களும் தங்கள் வீட்டில் அல்லது அவர்கள் சார்ந்த சமூக அமைப்புகளில் வைத்து அந்தந்த மொழியைக் கற்றுத் தருவது எளிது. இதைத்தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் செய்கிறார்கள்.அரை நூற்றாண்டுக்கு முன்னால்வரை உயர்நிலைப்பள்ளி வரை மாணவர்களுக்கு தமிழ்தான் பாடமொழியாக இருந்து வந்தது. விஞ்ஞானிகளும், அறிஞர்களும் கல்லுரியில்தான் ஆங்கிலப் பாடமொழியில் படித்தனர். அவர்களது தமிழும் நன்றாக இருந்தது. ஆங்கிலமும்நன்றாகவே இருந்தது. இப்போது ஏன் தாய்மொழியைப் பயிற்றுவிக்கத் தயங்க வேண்டும் என்பது புரியவில்லை.ஏற்கனவே ஆங்கிலக் கலப்பால் மொழிச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது.

பள்ளியிலும் பயிற்றுவிக்காமல் போனால், தமிழ் வழக்கொழிந்துவிடும். அப்படியொரு நிலைமைக்கு நமது தலைமுறை காரணமாக இருந்துவிடலாகாது.முதல்வர் இதில் தலையிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து முன்பள்ளி, தொடக்கப்பள்ளியிலும் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ் மற்றும் இரு பாடங்களைத் தமிழில் நடத்த தமிழக அரசு இந்த ஆண்டாகிலும் வகை செய்ய வேண்டும்.

10 comments:

  1. மக்களின் விருப்பத்க்கேற்ப தான் அரசு செயல்பட வேண்டும்.இரண்டுதட்டுகள் ஒன்றில் ஆங்கிலம் மற்றொன்றில் தமிழ் மக்கள் விருப்பம் என்னவோ அதை தெரிவு செய்யட்டும்.ஹிந்தி மொழி திணிப்பு என்றால் இதுவும் திணிப்பு தான் எல்லோரும் தாய்மொழிமூலமாக தான் சிந்திக்கிறோம்.மக்கள் தொகை வளர்ந்த இந்த காலக்கட்டத்தில் பிழைப்பு க்கு தன் எல்லையை தாண்டி செல்லவேண்டியுள்ளது எனவே பன்மொழிபுலமை இன்றைய நிலையில் அவசியமான ஒன்றாகும்.

    ReplyDelete
    Replies
    1. தாய் மொழியை தெள்ளத் தெளிவாகப் பயின்றால் தாய் நாட்டிலேயேப் பிழைக்கலாம். இதை இன்று வரை யாருமே யோசித்ததே இல்லை என்று தான் கிளத்துவேன். தமிழைப் பழையறப் பயின்ற அனைவரும் இன்றளவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வரலாற்றிலும் (கால்டுவெல், வீரமாமுனிவர், போப்). நாமெல்லாம் நம் தாய் மொழியை மதிக்காமல் இன்றளவும் இருப்பதனால் தான் நம்மை ஆளும் தகுதியை நாம் இழந்து வாடிவதலங்கிக் கொண்டு இருக்கின்றோம்.
      தமிழைப் படித்தால்தானே இங்கே வேலைப் பார்க்க முடியும். ஆங்கிலம் படித்தால் அப்படித்தான் எல்லையைத் தாண்டி ஓடவேண்டும். ஏனென்றால் இது தமிழ்நாடு தமிழ் மண் ஆங்கிலம் கற்றால் ஓடித்தான் ஆகவேண்டும்...... தமிழை கல்லூரியில்லும் பயிற்று மொழியாக ஆக்க வேண்டும் என்றாலும் நன்றே என்பேன்....

      Delete
    2. பிரச்சனை தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா என்பதில்லை. அது தாய்மொழி வழிக்கல்வியா என்பதே… பெரிய பெரிய கல்வி உளவியாளர்கள் ரூஸோ -விலிருந்து தேசதந்தை மகாத்மா காந்தி வரை ஆதரித்தது தாய்மொழிவழிக் கல்வியே…. தாய்மொழிவழிக் கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க முடியும்… அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகள் ஒரு மொழியை முழுமையாக கற்றுத்தர முடியாத நிலையென்பது அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கையாளாகாத் தனமும், அரசினுடைய பொறுப்பற்ற தனத்தையுமே காட்டுகிறது… பிரச்சனை பள்ளிகளில் இல்லை, ஆசிரியர்களிடத்திலும், அரசிடமே உள்ளது.
      அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க தயங்குகிற ஆசிரியர்கள் ஏன் அரசு பள்ளிகளில் மட்டும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும், எதற்காக பணியாற்ற வேண்டும். அரசு பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லையென்று பார்க்கும் வேலையை விட்டுவிட்டு ஓடிபோய்விடலாமே.. ஏன் ஓடவில்லை.
      பணியிட மாறுதல், பணிநிரவல் வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏழைக்குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வீதிகளில் நாய் பிடிப்பதுபோல ஏன் அலையவேண்டும். அவர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருக்கலாமே… செய்தார்கள் என்று சொல்ல முடியுமா…?
      பணியில் உள்ள ஆசிரியர்கள் தனது பிள்ளைகளின் நலன் மட்டுமே கருதி, எல்லா அடிப்படை வசதி, தரமான கல்வி நோக்கி தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் அரசுபள்ளி ஆசிரியர்கள், இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதிக்கூட இல்லாத அரசுப்பள்ளிகளில் படிப்பதைப்பற்றி ஏன் கவலைப்படவில்லை. தான் பணிபுரியும் பள்ளிகளின் தரம் குறித்து என்றவாது கவலைப்பட்டதுண்டா, அப்படி கவலை பட்டிருந்தால் அந்த பள்ளிகள் அதே நிலைமயில் நீடிக்குமா,,,? அந்த பள்ளிகளை தரமான பள்ளியாக மாற்ற எத்தனை முறை கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருப்பார்கள், எத்தனை முறை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருப்பார்கள், மாணவர்களை திரட்டி ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியுமா அவர்களால்… வெட்கமாக இல்லை அவர்களுக்கு…?
      அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி உழைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்களே….. அரசை சொல்லி குற்றமில்லை. அரசு எந்திரம் தனியாரை வளர்த்தெடுக்கவே விரும்பும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாது. அரசு எந்திரம் அதிலும் தனக்கு ஆதாயத்தையும், விளம்பரத்தையும் மட்டுமே தேடிக்கொள்ள பார்க்கும்… அக்கறை இருந்திருந்தால் அரசு பள்ளிகளை சீரழிந்துபோக விட்டுருக்காது. தனியார் பள்ளிகளை ஊக்குவித்து தனியார் பள்ளிகளின் லாப வேட்டைக்கு துணைபோயிருக்காது. கல்வி கடைசரக்காகியிருக்காது…
      அரசு பள்ளிகளை மேம்படுத்த இன்று வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்கால திட்டந்தான் என்ன…? அரசு சம்பளம் கைநிறைய பெறவேண்டும், தான் பணிபுரியும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லையென்று ஓலமிட்டுக்கொண்டு, தனது சந்ததிகளை மட்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். எவன் பிள்ளை எப்படி போனால் என்ன என்று பத்தோடு பதினொன்றாக இருந்துவிட போகிறீர்கள் அப்படித்தானே,,,?

      Delete
    3. அருமை அருமை

      Delete
    4. அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் பயிலவேண்டும் என்ற கட்டாயச்சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.இதனால் அரசுபள்ளியின் தரமும் தானாக உயரும்.

      Delete
  2. Dear pg frnds now only I called trb. They said they r going to put pg appoints soon but dont knoe when. That lady asked to keep on seeinh the net. When asked about the case on trb as usual she hung the fone. Plz all pg call trb helpline now.......

    ReplyDelete
    Replies
    1. i also called trb they said pg final list will be released on next month

      Delete
    2. Its ok sir ivlo naal pg pera ketta udanae enna question ketkaromnu kooda gavanikkama teriyadu teriyadunu sonnavanga oru date r time r atleast bathil solrangalae. At present happy with that........... lets wait with hope as how we waited so farrrrrrrr...........

      Delete
  3. Hi friends, PGTRB Final List eppo publish pannuvaanga nu sollunga please?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி