சனிக்கோளின் நிலவில் தோன்றியுள்ள புதிய தீவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

சனிக்கோளின் நிலவில் தோன்றியுள்ள புதிய தீவு.


சனிக்கோளின் நிலவில், புதிய தீவு உருவாகியிருப்பதை, அமெரிக்காவின் காசினி விண்கலம், படம்எடுத்து அனுப்பி உள்ளது. இதுகுறித்து,
தலைமை ஆய்வாளரும், கார்னெல் பல்கலைக் கழகத்தில், வானியல் சாஸ்திரத்தில் ஆய்வு செய்து வரும் மாணவருமான, ஜேசன் ஹாப்கார்ட்டர் கூறியதாவது:

சனிக்கோளின் நிலவான டைட்டனை ஆய்வு செய்ய, காசினி விண்கலத்தை, நாசா அனுப்பியது.இந்த விண்கலம் கடந்த ஆண்டு, ஜூலை 10ம் தேதி, கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் உள்ள, புரோபல்ஷன் ஆய்வகத்திற்கு, டைட்டனின் படங்களை அனுப்பியது. இந்த புகைப்படங்களுடன், பழைய படங்களை ஒப்பிடுகையில், டைட்டனின் வடதுருவப் பகுதியில் உள்ள, இரண்டாவது மிகப் பெரிய கடல் தீவுப் பகுதி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ரகசிய தீவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தீவு உருவானதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜேசன் கூறியுள்ளார். சனிக்கோளின் நிலவான டைட்டனின் வானிலை, பூமியின் வானிலையை போன்று நீடித்து காணப்படுகிறது. இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர் ஜியோசயின்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி