காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2014

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு.


தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,484க்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், 2010, டிசம்பரில், அறிவிப்பு வெளியிட்டது. 2011,பிப்ரவரியில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் அடிப்படையில், தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதோடு, காத்திருப்போர் பட்டியலையும், வெளியிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 24 பேர், நிரப்பப்படாத காலியிடங்களில், தங்களுக்கு பணிவழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: உரிய நேரத்தில், காலியிட விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்திருந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்பியிருப்பர். சிறப்பு நேர்வாக கருதி, அரசு அளிக்கும் காலியிடங்கள் விவரங்களின் அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்புவதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே ஒரு முறையாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் ஆட்சேபனையில்லை என, அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 2012,செப்., 15 முதல், 2013, ஜன., 2 வரையிலும், 352, காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த, 352, காலியிடங்களிலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, நிரப்ப வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி