'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர்கள்


மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர் 'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' துவங்கியது.
முதல்நாளான நேற்று ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்டத்தில் 67 பேர் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இதில், முன்கூட்டியே விருப்ப மாற்றத்தில் 7 பேர் மாவட்டம் விட்டுமாவட்டம் மாறுதல் பெற்றனர். 13 பேர் மட்டும் பங்கேற்றனர். அவர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள 49 பேர் கவுன்சிலிங்கை புறக்கணித்தனர். இதில் சிலர், தாங்கள் பணிபுரியும் இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றனர்.புறக்கணிப்பு ஏன்? : ஆசிரியர் பயிற்றுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:எங்களுக்கு இந்தாண்டுதான் 'கவுன்சிலிங்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் எண்ணிக்கை இல்லாத இடங்களில் 'சர்பிளஸ்' ஆக பணிபுரியும் ஆசிரியர்களை மாற்றி 'பணிநிரவல்' செய்வது என்பது எங்களுக்கு பொருந்தாது.

எங்களுக்கு மாணவர், ஆசிரியர் விகிதாசாரம் என்பதுஇல்லை. எங்களை ஏன் 'கவுன்சிலிங்'கில் சேர்க்க வேண்டும்.எங்களை சேர்க்கக் கூடாதுஎன, ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளோம். நேற்று கோர்ட் உத்தரவு வரும்என எதிர்பார்த்து, 'கவுன்சிலிங்' நடந்த இளங்கோ மாநகராட்சி பள்ளிக்கு செல்லாமல், ராஜாஜி பூங்காவில் ஆலோசித்தோம், என்றனர்.'குழப்ப' உத்தரவு : 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவில், பணியேற்கும் 'மாவட்டம்' பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த 'பிளாக்' என்ற விவரம் இல்லை. இதனால், உத்தரவு குழப்பமாக இருப்பதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி