பிஎஸ்என்எல் சேவை மையங்களில் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

பிஎஸ்என்எல் சேவை மையங்களில் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்.


பரிசோதனை முயற்சியாக, வாடிக்கையாளர் சேவை மையங்களில், இணையதள மையங்கள்(பிரவுசிங் சென்டர்) தொடங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைபேசி, செல்பேசி, இணையதள சேவை உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

தமிழகம் மற்றும் சென்னையில் இணையதள இணைப்பு பெற முடியாதவர்கள், அவசரத்திற்கு இன்டர்நெட் சென்டர்களை பயன்படுத்துபவர்களின் வசதிக்காக இணையதள சேவை மையங்கள்(பிரவுசிங் சென்டர்) தொடங்க பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக புறநகர், சிற்றூர் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் இந்தச்சேவை தொடங்கப்படும்.அதற்காக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்காத மலை, தொலைவில் உள்ள ஊர்களில், சிற்றூர்களில் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் பிற நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட நிதியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிதி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படும். அந்த நிதியை கொண்டு இந்தச் சேவை வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம், அலுவலகங்கள், இணைப்பகங்களில் இந்த பிரவுசிங் மையங்கள் தொடங்கப்படும்.

கிராமபுறங்கள்தான் இந்த திட்டத் தின் இலக்கு என்றாலும் வரவேற்பு உள்ள நகர் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

இந்நிலையில் சோதனை முயற்சியாக சென்னை பூக்கடை வாடிக்கை யாளர் சேவை மையத் தில், இணையதள சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.இரண்டு பேர் பார்க்கும் வகையில் 2 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்திற்கு 30 ரூபாய் கட்டணம். இது இப்போது சென்னையில் தனியார் மையங்களில்வசூலிக்கும் 20 ரூபாயை விட அதிகம். அதுமட்டுமின்றி ஒரு பக்கம் அச்செடுக்க 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வெளியில் உள்ள கடைகளில் 5 ரூபாயாக உள்ளது. சேவைக் கட்டணம் அதிகமாக இருப்பதால் வரவேற்பு அதிகரிக்குமா என்பது தெரியவில்லை. இந்த மையத்தில் இருந்து ஃபேக்ஸ் அனுப்பும் வசதியும் உள்ளது. இந்த மையத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இணையதள மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இந்த கட்டணங்கள் டெல்லி தலைமையகம் நிர்ணயித்தது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி