டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியால் உடனடி நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வை கடந்த டிசம்பரில் நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 5,000க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எழுதினர்.

இதற்கான ரிசல்ட் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு, பதிலாக தவறுதலாக பெயில் ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள் போடப்பட்டிருந்தன. இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்த தவறால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசுஊழியர்கள் தவிப்பு என்ற தலைப்பில் தினகரன் நாளிதழில் நேற்று ஆதாரத்து டன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக டி.என்.பி.எஸ்.சி. உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினகரன் செய்தியால்தான் ஒரே நாளில் எங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்றுதங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், துறை தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வு முடிவின் தேர்வாணைய செய்தி வெளியீட்டு எண் 6, பக்கங்கள் 591& 597 வரை உள்ள லிஸ்டில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலின் தலைப்பானது, பெயில் என்று பதிவாகியுள்ளது. இதனை மாற்றி தேர்ச்சி பெற்றோர் பட்டியல் என திருத்தி வாசிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை -

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1001856

    ReplyDelete
    Replies
    1. நாளை படையெடுப்போம் சென்னை மாநகரை நோக்கி....

      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்.....

      ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      SATHEESH 8760561190 DINDIGUL

      KANNAN 9965671766 DINDIGUL

      PRAKASH 7418512313 DHARMAPURI

      PRABU 8098615694 DINDIGUL

      Delete
  2. Hi bharathi sir. Any news about pg and polytechnic test of LA 57%irrundha ezhuladhamudiuma

    ReplyDelete
  3. எஸ்.கே.எஸ் ஐயா

    இந்த மாத இறுதி க்குள் ஒரு முடிவு கிடைத்து விடும்

    பலவகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வு எழுத குறைந்தபட்சம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    Minimum Qualification:

    Lecturer (Non-Engineering Subjects) [English / Mathematics / Physics / Chemistry]

    A First Class Master’s Degree in the Appropriate Branch of Study

    ReplyDelete
    Replies
    1. 2012 போட்டித்தேர்வில் வெளியிடப்பட்ட விளக்க குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்து அதற்கான முழு விவரத்தை பெறவும்.

      http://trb.tn.nic.in/POLY12/27022012/PolyPros.pdf

      Delete
    2. Mr.bharathi sir pls give your mobile number in my mail id karthi_keyan456@yahoo.com

      Delete
  4. 90 and above எடுத்த வௌியூர் நண்பர்கள் இன்று இரவே சென்னை நோக்கி புறப்படவும் உங்களின் ஒரு வருட கால கடின உழைப்பு பறிபோகும் நிலையில் அதை மீட்க இதுவே இறுதி வாய்ப்பு என்பதை மறந்துவிடாதீர்கள் யாரேனும் கலந்துகொள்ளட்டும் பலன் நமக்கும்தானே கிடைக்கும் என்று என்னி இருந்துவிடாதீர்கள் அரசின் இந்த அரசியல் லாபம் காண பிறப்பித்த ஜி ஒ வை மாற்ற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்தழைப்பும் மிக அவசியம் அனைவருக்கும் வீட்டில் முக்கிய வேலை இருக்கலாம் வீடு தூரத்திலும் இருக்கலாம் இதனை நீங்கள் பொருட்படுத்தினால் உங்கள் வேலைவாய்பை இழப்பீர்கள் என்பதை மறவாதீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி