அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2014

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை


அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள, கல்வி வளர்ச்சி குறியீட்டில், புதுச்சேரி முதலிடத்தைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான தனியார்பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடங்களில் இயங்குவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. பல பள்ளிகளில், அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட அறைகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தகவல் சென்றுள்ளது.இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வல்லவன், ஆய்வு நடத்தும் அதிகாரிகளுக்கு, சுற்றறிக்கை ஒன்றை, கடந்த 16ம் தேதியன்று அனுப்பி உள்ளார்.

சுற்றறிக்கையில், 'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, முழுமையான கட்டடத்தில், அனைத்து பள்ளிகளும் இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், சில பள்ளிகள், அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட கட்டடங்களில் இயங்குவதாக, கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அஸ்பெஸ்டாஸ் ஓடு காரணமாக, மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூட வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, சுற்றறிக்கை வெளியான 10 நாட்களுக்குள், இயக்குனரிடம் சமர்ப்பிக்கவேண்டும்' எனவும், ஆய்வு நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவித அடிப்படையான வசதிகளும் இல்லாத கட்டடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும், அங்கு படிக்கின்ற மாணவ மாணவிகளின் நலன் கருதிமாற்று ஏற்பாடுகளை செய்யவும், பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

1 comment:

  1. எங்கிருந்து வந்தது இந்த கல்வித்துறைக்கு இப்படியொரு திடீர் நாஞோதயம்.

    2004-ல் கும்பகோணத்தில் 94 பச்சிளங்குழந்தைகளின் உடல் தனியார் பள்ளிகளின் லாப வெறியால் கருகிபோனதே...
    உடனடியாக அரசு ஒரு அரசானை வெளியிட்டது, இனி தமிழ்நாட்டில் கூரை கட்டிடங்கள் உள்ள பள்ளிகளே இருக்க கூடாது என்று... உடனே அனைத்து பள்ளிகளிலும் கூரை பிரிக்கப்பட்டு அஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் அழங்கரிக்கப்பட்டன... குழந்தைகளின் பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்துவிட்டதாக அரசும், கல்வித்துறையும் அதோடு பிரச்சனையை கைகழுவி விட்டது.
    இப்பொழுது திடீரென அஸ்பெஸ்டாஸ் சீட்டு உள்ள பள்ளிகள்மீது நடவடிக்கை என்றால், இதுநாள் வரை இவர்கள் எங்கு சென்றார்கள், அதை ஏன் செய்யவில்லை. இதைவிட கல்வித்துறைக்கு வேறு என்ன வேலையிருக்கிறது. அன்று அந்த குழந்தைகள் தீயில் வெந்து செத்தார்கள் இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் அஸ்பெஸ்டாஸ் சீட்டுக்களால் வெயிலில் புழுங்கி நொந்து சாகிறார்கள்... பல தனியார் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இது தொடர்கதையாகிறது... இந்த ஆண்டும் இந்த நடவடிக்கைகள் சம்பிரதாயமாகவே நடக்கும், மீண்டும் இது தொடர்கதையாகும்... வாழ்க கல்வித்துறை.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி