பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.


மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.ஈராக் உள்நாட்டு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் அது இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எனவே அதற்கு ஏற்ப பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று தெரிகிறது.

இது தவிர வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு வரி வசூல் உள் கட்டமைப்பிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வர உள்ளது.மத்திய பட்ஜெட்டில் பெண்களை கவரும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மாத சம்பளம் வாங்கும் பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3½ லட்சமாக அறிவிக்கப்படும்என்று தெரிகிறது.இதன் மூலம் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கிடைக்கும். இது லட்சக்கணக்கான பெண்களை வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெற வழி வகுக்கும்.

2 comments:

  1. TET pass anavargalukku ippo matha varumanamae illla ..... vari villau ethuku???

    ReplyDelete
  2. சோத்துக்கே வழியில்ல வரி வட்டிTrbய முதல்ல லிஸ்ட் போட சொல்லு நானும் வரிக்கட்டணும் சீக்கிரம் போஸ்ட்டிங் போடுங்கப்பா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி