அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!


*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

* மூன்றாண்டு வரையறை ஆசிரியர் பயிற்றுனர்களுக்குமட்டும் பொருத்திப் பார்த்து ஈவு இரக்கமற்ற வகையில்பந்தாடப்பட்டுள்ளனர்.ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆசிரியர்களுக்குரிய மாறுதல் நெறிமுறைகள் பின் பற்றப் படவேண்டும்.

* இந்த மூன்றாண்டு வரையறை தமிழ்நாடு அரசின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரையில் தமிழக அரசு பொருத்திப் பார்க்கத் தயாராகி விட்டது என்பதற்கான சோதனை முயற்சியின் ஆய்வுக் களமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதோ?எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.

*ஆசிரியர் பயிற்றுனர்களின் பேரவலத்தைச் சகித்துக் கொள்ளவும், பார்வையாளராக நின்று வேடிக்கை பார்க்கவும் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் இயக்கங்கள் தயாராக இருக்காது என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் தளத்தில் காணப்படும் கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டு பல்வேறு வகையான ஆலோசனைகள், ஐயங்கள்,கோரிக்கைகள், மனக்குமுறல்களை யெல்லாம் ஆசிரியர்கள் கொட்டித் தீர்த்த காலங்களிலெல்லாம் ஆசிரியரோடு சமரிட்டும், சமாதானம் செய்தும் ,மௌன சாட்சியாக நின்று அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் பலா பலன்களை மிகைபடுத்தி எடுத்துரைத்தும், பலவீனங்கள், குறைபாடுகள் ஏதுமே இல்லாத அற்புதமான திட்டம் எங்களது அனைவருக்கும் கல்வித் திட்ட மே என்று எல்லா உயர் மட்ட அதிகாரிகளுக்காகவும் வக்காலத்து வாங்கிக் கொண்டு களப் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுனர்களின் மீது சிறு துளி பச்சாதாபம் கூட இன்றி மிக மிக மோசமாக நடத்தி இருப்பது கொடும் செயலாகும்.இந்த கொடும் செயலைக் கேள்விப்படும் பொழுது மனதிலும் , உடம்பிலும் பெரும் அதிர்வலைகள்ஏற்படுகிறது.

*வரலாற்றின் பக்கங்களில் மத அழிப்பு, மொழி அழிப்பு, ஜனநாயகப் படுகொலை, இனப்படுகொலை போன்றவற்றை காண்கிறோம். அது போன்று தமிழ் நாட்டின் கல்வி வரலாற்றில் ஆசிரியர் பயிறுனர்கள் நடத்தப் பட்டிருக்கிற விதமும் வருங்காலவரலாற்றில் பதிவு செய்யப்படாமல் இருக்கப்படுவதற்கு என்னென்ன வழிவகைகள் மேற்கொள்ளப் ப ட வேண்டுமோ அத்தகு திசை வழி நோக்கிஅனைவருக்கும் கல்வித்திட்டம்பயணம் தொடர வேண்டும்.

இதுவே தமிழ்கூறும் நல் உலகத்தின் வேண்டுகோளில் ஒன்றாகும்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி