பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ளஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ளஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை நடைபெற உள்ளபணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. TET CASE AGAINST FOR NEW GO pls visit more news at www.kavikkuyil.blogspot.com/in,hi admini dnot delete because thats a news i will share all pepole thats all

    ReplyDelete
  3. TET CASE FOR AGAINST NEW GO

    மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

    ReplyDelete
  4. This above news coming on www.kalvikkuyil.blogspot.com its correct mr.murugavel

    ReplyDelete
  5. maniyarasan, sathesh,Sri this message is true or false . please write your thinking.

    ReplyDelete
  6. TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )
    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கான
    தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட WEIGHATE யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என TRB யில் உயர் பதவியில் உள்ள கல்விக்குரலின் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்

    ReplyDelete
  7. 100 சதம் வாய்ப்பு இல்லை.அடுத்த தேர்வுகளில் 2014 வேண்டுமனால் நடைமுறை படுத்தலாம். யாரும் இது மாதிரி யூகங்களை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  8. TET CASE CANCEL AGAPOGUTHU ITHU UNMAI.AANAL UG TRB CHANCEA ILLAI

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி