உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும்


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 25-11-2013 முதல்6-12-2013 வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தலின்போது அவர்கள்பெற்ற மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மேலும் சில தகவல்களை சேகரிக்கவேண்டி உள்ளது. எனவே கேட்கப்படும் சரியான ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.

தேர்வர்கள் பி.எட். மற்றும் எம்.எட் கல்லூரிகளில் பெற்றசர்வீசஸ் பற்றிய விவரத்தை படிவம் 1-ல் தெரிவித்து சமர்ப்பிக்கவேண்டும்.அவர்கள் எம்.பில். மற்றும் பட்டப்படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தார்களா?அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தார்களா? என்பதற்கு படிவம் 2-ஐ சமர்ப்பிக்கவேண்டும்.

சமர்ப்பிக்கவேண்டிய இடம் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி ஆகும்.

தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவினர் ஜூலை 1-ந் தேதியும், வணிகவியல் பாடப்பிரிவினர் 2-ந் தேதியும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் 3-ந் தேதியும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர பாடப்பிரிவினர் 4-ந் தேதியும் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்து பாடப்பிரிவினரும் மேற்கண்ட குறிப்பிட்ட தேதிகளில் காலை 9-30 முதல் மாலை 5-30 மணிவரை சமர்ப்பிக்கலாம்.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி