அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு.


மதுரை ஐகோர்ட் கிளையில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் 19 அரசு, 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்த பின்தான், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் துவங்கும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளது. இப்பல்கலையை நிர்வகிக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வந்தது. பல்கலையை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 175 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.அண்ணாமலை பல்கலை ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.150, பல் மருத்துவப் படிப்பிற்கு 100 இடங்கள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 290 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பல்கலை மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 5லட்சத்து 54 ஆயிரத்து 370 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இங்கு இன்று (ஜூன் 25) கவுன்சிலிங் துவங்கும் என பல்கலை நிர்வாக அலுவலர், பதிவாளர் ஜூன் 20 ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கவில்லை. அண்ணாமலை பல்கலை கல்லூரி கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்துவதால், தகுதியான மற்றும் அரசு ஒதுக்கீட்டில் சேர வாய்ப்புள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

பல்கலையின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் போது, இங்கும் நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன் விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜரானார். தமிழக சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலாளர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை பதிவாளர், அண்ணாமலை பல்கலை நிர்வாக அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி