கர்நாடக மாநில சிஸ்டம் தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்? Dinakaran Peter Mama - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

கர்நாடக மாநில சிஸ்டம் தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்? Dinakaran Peter Mama


காலைல எழுந்து, காபி போட்டு, பிரேக்பாஸ்ட்...அப்புறம் லஞ்சுன்னு செஞ்சு முடிக்கறதுக்குள்ளே போதும்போதுமென்றாகி விடுது...ஐந்து மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருக்கு...
என்று அலுத்துக்கொண்டே அடுக்களையில் இருந்து வந்தார் சுசீலாமாமி. என்ன இதுக்கே இப்படி புலம்பறே...பக்கத்து ஸ்டேட்டுல பாரு, ஆசிரியருங்க அதிகாலைல எழுந்துடறதோடு நிற்கலே...பசங்களையும் வாட்ச் பண்றாங்க தெரியுமா...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க...

முதல்ல விஷயத்தை சொல்லி முடிச்சிடறேன்...

கர்நாடக மாநிலத்துல ஒரு வித்தியாசமான சிஸ்டம் இருக்கு. பள்ளியில் படிக்கற பசங்களோட பேரன்ட் போன் நம்பர்களை வாங்கிக்கறாங்க. வாத்தியார்களை விட்டு காலை ஐந்து மணிக்கு அவங்களுக்கு போன் பண்ணி, பையனை எழுப்புங்க; படிக்க வையுங்க, யோகா,ஜிம்முக்கு கிளம்ப வையுங்க...ன்னு கேட்டுண்டே இருப்பாங்களாம். இப்படி செய்றதால, பசங்களை அவங்க கண்காணிக்கறதோடு, பேரன்ட்டோட பொறுப்புகளை ஷேர் பண்ணிக்கறாங்க. இதுல அவங்களுக்கு சந்தோஷம் தான்... அட, இப்படி அருமையான சிஸ்டம், தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்...பசங்களை பத்தி நாம கவலைப்படவே வேணாம்... ஆனா, நாமளும் இல்லே, அஞ்சு மணிக்கே எழுந்திருக்கணும்... ஆங், வந்திடப்போவுது...

1 comment:

  1. Evanoo kelappi vitta pooiyanna takaval.
    Entha Orula tea kadaiyei 8 maniku thana therappanka,
    vatthiyar vellai yendral athu Karnataka Governament thane indiavilae best.
    athuvum PU college lecturer inna (Namma oru +2 thane) oru mani nera vellai Dhan.
    Eppadi erruka yen pulluvuringa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி