TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு.


டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு, போட்டித் தேர்வு நடந்தது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர்களில், 1,500 பேர், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைத்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு வேலை கிடைத்தும், பணியில் சேர முடியாத நிலையில், 1,500 பேரும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை பணியாளர்கள் கூறியதாவது: பணி நியமன பணியை மேற்கொள்ள வேண்டிய இணை இயக்குனர் கருப்பசாமி, பல்வேறு பணிகளில், 'பிசி'யாக உள்ளார். இதனால், பணி நியமன வேலை இழுத்துக் கொண்டேசெல்கிறது. பல பிரிவுகளில், பணியாளர் இல்லை. மாநில அளவில், கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

தேர்வு பெற்றவர்களை உடனே பணி நியமனம் செய்திருந்தால், அலுவலகங்களில் வேலையும் நடந்திருக்கும்; அவர்களும், நான்கு மாதங்களாக, சம்பளம் பெற்றிருப்பர். தற்போது, எதற்குமே வழியில்லாமல் காத்திருக்கின்றனர். கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற அனைத்து இளநிலை உதவியாளர்களையும், உடனே பணி நியமனம் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. ipoyavathu engala patthi yosichingale thanks for that. tet pass panni wait panrathu thalavithinna g4 pass panni education dep eduthavangalaum wait panna vaikuranga .tet pass panna naraiya per g4 pass panni ithulayavathu posting pogamatomanu eduthu ithulaum wait panrathu evlo manaulaichala irukku. edu dep ellarum setthutainga pola

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி