Flash News:1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

Flash News:1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்


சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர்இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. 2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

5. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால்மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்த மாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள்,வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம்ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், ஆகியவை வழங்கப்படும்என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

187 comments:

  1. Replies
    1. இப்போது குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த தேர்வில் மட்டுமே நிரப்பப்படும்..தாள் 2 க்கான இறுதிப்பட்டியல் தயார் நிலையில் உள்ளது..இன்று இரவு வெளியிடப்படலாம்..ஆனால் trb இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம் என கூறிவருகிறது..

      Delete
    2. prathap sir is it confirm ah????shall we expect result today??please send ur mail id or phone no to this mail id biothala@gmail.com

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. KALAI Sir & VIJAYKUMAR CHENNAI Sir LIST patri ethavathu SEITHI irunthaal

      pathividungal.

      Delete
    5. TRB முடிவில் அதிரடி மாற்றம்...theinbornteachers.blogspot.in

      Delete
    6. Prathap sir i am Arul Nallapalayam call me sir 7708572932

      Delete
    7. Prathap sir i am Arul Nallapalayam call me sir 7708572932

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  2. TNTET PATRI ENDA ORU ARIVIPPUM VARAVILLAI ENNA KARANAMO THERIYA VILLAI


    ONE ASSUMPTION

    1.NEW GO REMOVING +2 FROM WEIGHTAGE WILL BE RELEASED SUBSEQUENTLY A LIST THAT WAS PREPARED BASED ON NEW GO WILL BE RELEASED IMMDIEATLY COUNSELLING MAY BE CALLED

    THIS METHOD WILL PUT A FULSTOP TO CASES AGAINST GO 71, ETC

    SECONDLY GOVT MAY TELL COURT THAT IT IS NOT MANDATORY FOR BRTE TO BE PROMOTED AS BT IT IS GOVT DECISION

    SO THAT EVERY THING WILL COME TO AN END

    THIS IS GOING TO HAPPEN BECAUSE GOVT MUST DO SOME THING TO RELEASE THE LIST


    I HAVE NO SOURCE THIS PURELY MY IMAGINATION

    ReplyDelete
    Replies
    1. நல்லா கெளப்பிவிடுங்க. 2 நாளில் உங்களுக்கெல்லாம் முடிவு வந்துரும்.

      Delete
    2. Real reason is TRB updating the changes in weightage marks made by the candidates. Then only they can put the selection list. They need some time to finish it. Dont create rumours please.

      Delete
    3. Mr வெங்கட்,

      சில வாரங்களுக்கு முன்பு நீங்கள், மிகவும் உறுதிபடுத்தப் பட்டத் தகவல் என்று கூறிய "தமிழ்-2198,ஆங்கிலம் ....... மொத்தம் 14500 பணியிடங்கள்" என்ற தகவலுக்கு தற்போது உங்கள் பதிலென்ன?

      உங்களுக்கு +12 வில் குறைவான மதிப்பெண் என்பதால், அது மட்டும் நீக்கப்படும் என்று புதிதாக ஒரு புரளியை கிளப்ப வேண்டாம்.

      Delete
    4. maniyarasan note my message this is purely my imagination i have mentioned it also the list i gave was given by rajalingam not mine

      ithu news all my assumption for preparing for tet u should study all the words carefully

      Delete
    5. MANIYARASAN READ MY MESSAGE CAREFULLY AND GIVE UR COMMENT

      NOTE MY +2 MARK IS 1013

      Delete
    6. mani sir tamil bc ku cutoff evlo sir

      Delete
    7. அப்படியே அவர் கூறியதாக இருக்கட்டும், அதை எப்படி உங்களால் உறுதிபடுத்தப் பட்ட தகவல் என்று கூற முடிந்தது?

      அவர் கூறுவது அவருக்கே உறுதியான தகவலா இல்லையா என்ற நிலை இருக்கும் போது, நீங்கள் எப்படி அதை உறுதியான தகவல் என்று கூறினீர்கள் என்பதுதான் என் கேள்வி.

      தகவலை எழுதுங்கள் ஆனல் உறுதியான தகவல் என்று எழுதாதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

      வழக்கின் நிலை குறித்து பலருக்கும் தெரியும்.ஆனால் உங்களது assumption படி அங்கு நிலவுவதாக ஒன்றும் தெரியவில்லையே.

      நீங்கள் குறிப்பிடும் உங்களது assumption கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதுவது உங்களது பொறுப்பு.

      Delete
    8. OK I ACCEPT UR OPINION
      WHAT I COME TO SAY IS IF GOVT GOES IN THIS WAY THEY CAN RELEASE THE LIST WITH OUT ANY HURDLES

      Delete
    9. திரு மனியரசன் அவர்களே...
      இங்கு யார் சொன்னது தான் நடந்தது?????பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ ஒரு இடத்தில் 18000 பணியிடம் என்கிறார் மற்றொரு இடத்தில் 20000 பணியிடம் என்கிறார்....பின்னர் அறிக்கையில் 13777 என புள்ளி விபரம் காட்டுகிறார்.....பின்னர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் 1408 பணியிடம் நிரப்பபடும் என்றார்.....அவர்கள் சொன்னதாவது நடந்ததா இல்லையே.....யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...
      எல்லோரும் அவரவர் கருத்தை தான் சொல்லுகிறார்கள்.....சில தடவை இனிக்கும் பல தடவை வலிக்கும்.....

      Delete
    10. திரு ராஜாலிங்கம் P,

      கல்வித் துறை அமைச்சர் கூறியதற்கு அர்த்தம் இருக்கிறது.பேராசிரியர், PG,UG.DTED என கூட்டப்படும் பணி நியமனங்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்த மொத்த கூடுதல் அமையும்.

      எந்த முடிவும் அறிவிக்கும் முன்பே அவர்கள் சொன்னது நடைபெறவில்லை என்று நீங்களே சொன்னால் எப்படி?

      அதோடு அமைச்சர் மற்றும் நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதற்கும், TET தேர்வோடு தொடர்புடைய கல்விசெய்தி வாசகர் ஒருவர் உறுதியான செய்தி என்று தலைப்பிட்டு ஒரு தகவலைத் தருவதற்கும் வேறுபாடு இருக்கிறது.

      ஊடங்கங்கள்,நாளிதழ்களில் வெளிவரும் முன்பே பல உண்மையான தகவல் கல்விசெய்தியில் வெளியாகியுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      தகவலை வெளியிடுங்கள்.ஆனால் உறுதியான தகவலை மட்டும் அழுத்திச் சொல்லுங்கள் என்பதே என்பதே எனது வேண்டுகோள்.


      Delete
    11. Mr.Maniarasan nanpare...

      Education minister-i Vida ingu ellorumee thelivaakaththan irukkiroom.....
      Naangal sonnathum kuuduthal paniyidangal serththu varalam entre eduththuk kollungal...

      Delete
    12. "வரலாம்" என்ற வார்த்தையை முன்பே உச்சரித்து இருந்தால் பிரச்சனை இருக்காது.

      TRB அதிகாரியிடமே விசாரித்து எழுதப் பட்ட செய்தி என்பததால்தான் ஏமாற்றம்.

      அதோடு கல்வித் துறை அமைச்சரை தெளிவாகத்தான் இருக்கிறோம் என்பது அவரின் மீதான கோபத்தை வெளிப்படுத்தலாம்.ஆனால் உண்மையாகிவிடாது.

      Delete
    13. Thaangkal oruvar thaan intha valaithalaththil unmaiyei maddume sollukirir pola.....mmm

      Delete
    14. நான் உங்களிடம் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.நான் மட்டுமே உண்மையை எழுதுகிறேன் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

      அனைவருமே உணர்ச்சியின் விளிம்பில் இருக்கிறோம்.அதனால் தவறான தகவலைத் தராதீர்கள் என்றுதான் வேண்டுகோள் வைத்தேன்.

      உங்களை மட்டுமல்ல,திரு வெங்கி,ஜெயப் ப்ரியா madam போன்ற எல்லோரிடமும்தான் விளக்கம் கேட்டேன்.

      ஒருவேளை நீங்கள் வாக்குவாதம் செய்ய விரும்பினால் எது குறித்தும் எந்த தலைப்பு குறித்தும் விவாதம் செய்ய நான் தயார்.நீங்கள் தயாரா?

      Delete
    15. முன்னுக்கு பின் முரணாக பேசவேண்டாம்.....
      நீங்கள் முதலில் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்கிறீர்கள்....
      இறுதியில் வாக்குவாதம் செய்ய தயாரா என்கிறீர்கள்.....
      தெளிவாக சொல்லுங்கள்....

      எதற்கும் துணிந்தவன் தான்...

      Delete
    16. முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என் வழக்கம் அல்ல.நீங்கள் விரும்பினால் நான் தயார் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

      உங்களுக்கு விருப்பமா?

      Delete
    17. Mun ku pin murnaka pesa matiyala nambitom ya, enga poratatha svyanala poratam nu sona anike ne yaru nu enta orku terincuducu sir.

      Delete
    18. rajalingam sir unka rendavathu peru sorichandrana sorry arichandrana? Unma matum pesaravar mathiri nala act kutukrinka? July9th special list varuthunu reel reela utingo. Dubaakoruuuuuu

      Delete
    19. Mun ku pin murnaka pesa matiyala nambitom ya, enga poratatha svyanala poratam nu sona anike ne yaru nu enta orku terincuducu sir.

      Delete
    20. Mun ku pin murnaka pesa matiyala nambitom ya, enga poratatha svyanala poratam nu sona anike ne yaru nu enta orku terincuducu sir.

      Delete
    21. Mr pon sundar,

      நீங்கள் வருவீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.இன்னும் சிறிது நேரத்தில் இன்னொரு பெயரிலும் comment வரும்.

      அந்த உண்ணாவிரத்திற்கு நான் வரமாட்டேன் என்றுதான் ஆரம்பம் முதலே சொன்னேன்.அதை படித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் கண் மற்றும் அறிவு மீது குற்றமல்ல.

      இந்த உண்ணாவிரதம் குறித்து "எனக்கு விருப்புமில்லை வெறுப்புமில்லை" என்றுத் தெளிவாகவே எழுதியிருந்தேன்.அது அனைவருக்கும் தெரியும்.

      மீண்டும் மீண்டும் அது குறித்தே கேட்கப்படும் கேள்வியால் உங்களின் அறியாமை குறித்து சிரிக்கிறேன்.

      Delete
    22. Yankala eti vitu ne matum nalava mari vesama podu ra .yapdi ipdi. Unavida raja linkame nalavar tan. Unala edum mudiyatu sir

      Delete
    23. Mr.மணியரசன் Mr. Rajalingam இருவரும் சற்று அமைதி காக்கவும்.... நடந்து முடிந்ததை விடுங்கள், இங்கே இது சரியான மோதலும் அல்ல....

      Delete
    24. Nan raja linkam frind ela. Una mari aluku tan etiri. Suya nala poratam nu soniya eliya?

      Delete
    25. This comment has been removed by the author.

      Delete
    26. Mr பொன் சுந்தர்,

      comedy பண்ணாதீங்க.ஏதாவது உருபடியான காரணம் இருந்தால் எழுதுங்கள் நிச்சயம் பதில் அளிக்கிறேன்.

      Delete
    27. Mani sir, unkala partu enta ore siriikuttuu

      Delete
    28. Sorichandran rajalingam nii vitta poii motta yella ena achunu solamutiyuma unala? ThanI list, vacancy increase, ena ena soliputtu thiirincha. Nii edukura anchu pathu pichaiku ithu thevaya?

      Delete
    29. Nan ketatuku patil solu payantan koki

      Delete
    30. நண்பர் பொன் சுந்தர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

      தாங்கள் எழுதுவது ஆங்கிலமும் அல்ல தமிழும் அல்ல. தங்லீஷ் அதையாவது எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சி செய்தல் நலம்.

      Delete
    31. Mr. PonSundar Sir,

      எனது சொந்தம் இந்த உலகில் முதன் முதலாக ் தோன்றிய கரு முதல் ...
      இனி இந்த உலகம் இருக்கும் கடைசி நொடி வரையிலும் ் பிறக்க போகும் அனைத்து உயிர்களுமே என் சொந்தம் தான் ..... அதில் நீங்களும் அடக்கம் நண்பரே !!!!!

      குறிப்பு: நீங்கள் நினைப்பது போல ( Nan Yathavar cOmmunity um ilai ) Ithai Inge Kuripida enakum virupam ilai, irunthalum nengal enai Parkum Vitham Thavaru enpathai Ungaluku Ninaivu Paduthave...

      அனைவரையும் சமமாக பார்க்கவும் நண்பரே , நன்றி!!!

      Delete
    32. Suya nala poratam nu sonengla elaya?

      Delete
    33. Pon Sundar Sir, Ketathuku Pathil Sola payanthutanu yara mention paninga sir reply

      Delete
    34. Kumar sir. Nan ketatuku padil solla payantavanga yaru nu oruke terium. En etiri nenka ila. Vilagidunk a plz. Unkaluku nan pota cmmnt alicuten parkal ya .idai la varatenka.

      Delete
  3. ALL THE BEST...............
    S.G...............................Teachers
    B.T................................Teachers
    PG (900 post increased)..Teachers

    ReplyDelete
  4. எல்லாம் சரி இந்த காலிபணீயிடம் நம்மை கொண்டு நிரப்பப்படும் என்று சொல்லவில்லையே பாய் பன்னி என்ன பலன் இந்த அறிவிப்பால் என்ன பலன்

    ReplyDelete
  5. 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.............,

    S.G...............................Teachers
    B.T................................Teachers
    PG (900 post increased)..Teachers
    above 16000

    ReplyDelete
    Replies
    1. TET 2013 தேர்வர்களை கொண்டு நிரப்ப்படுமா??????????

      Delete
    2. 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்
      மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.............,

      இதனால அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூராக மாறி விடும்.
      குறிப்பு: இன்னும் ஓரிரு பணியிடங்கள் மட்டும் கூட்டி அறிவித்திருந்தால் தமிழ்நாடு அமெரிக்கா ஆகவும் வாய்ப்பு .
      வாழ்க ஆயா

      Delete
    3. Sathyjith sir
      Y this kola very?

      Delete
  6. Puthiya thodakkapallikalil thalamai asiriyaraka sg teachers niyamipparkala illai bed asiriyarai niyamipparkala any body tellme

    ReplyDelete
    Replies
    1. HM Post ke aasa pattutingala boss. Sooper.. nalla varanum neenga..

      Delete
    2. Mary medam sg tech veconcy i adhikarikum nokkil keten medam

      Delete
    3. Ok ok. Dont take it serious sir. SG seriority la first ullavargalai HM ah promote panvaargal endru ninaikiren.

      Delete
  7. SGT- 128
    BT- 126+ 250= 376
    PGT - 900 (9subjects)
    இவை அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் நிரப்பபடும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. சட்டசபையில் அறிவித்த பணியிடங்கள் 2452 யாருக்காக???

      Delete
    2. அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தானோ என்னவோ. அதைப்பற்றி ஒன்றும் வாய் திறக்கமாட்டேன் என்கிறார்களே.

      Delete
    3. Mr.பிரதாபன் உங்க எல்லா கமென்ட்டும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்...
      இன்னொரு வலைதளத்தில் வந்து உங்க வலைதளத்தை விளம்பரம் பன்னுவது நாகரீகமா????
      ஏன் உங்க கருத்தை இங்கேயே சொல்லலாமே!!
      அதை விடுத்து ஏன் உங்க வலைதளத்தை பார்க்க சொல்லுகிறீர்கள்.... அதுவும் ஒரு தடவை சொன்னா போதும்....
      கல்விசெய்தி அட்மின் இதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது....

      Delete
    4. ஆமா எதுக்கு டீ கடைக்கு கூப்பிடறமாதிரியே கூப்பிடறீங்க?
      தமாத்துண்டு message தானே copy and paste பண்ணா போதாதா?

      Delete
    5. theinbornteachers.blogspot.in அய்யா
      ஆனா குடுத்தீங்க பாருங்க expected cutt off for paper 1 ன்னு...!
      அத நம்பி அன்னைக்கு 500 ரூபாய்க்கு party வேற வைச்சி முடிச்சு
      இப்ப பொழப்பு சிரிப்பா சிரிக்குது.
      நல்லா வருவீங்க

      Delete
  8. இவை அனைத்துமே நடப்பு கல்வியாண்டு என கூறியிருக்கிறார் 2014-2015 இதில் நமக்கு எந்த பயனும் இல்லை..

    ReplyDelete
  9. next trb exam redy????????????????????????????

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. ENTHA TET LA VECANT ATHIKAM AKUMA...

    ReplyDelete
  12. yes pg trb conform... last year vacant 900 + 900 current year vacant total 1800 so pg trb conform next two or three months friends hope well all the best
    senthilkumar.v
    commerce

    ReplyDelete
    Replies
    1. Sir This vacancies are purely from Upgrading only, is any possible increase of vacancy from retirement.

      Delete
    2. sir, not at all 900 posting up gradation, one of the percent only upgrade so conform in pg trb exam friend

      Delete
  13. ITHO YENTHAN THEIVAM............AMMA ............. 1000 PG POST ...............VERY SUPER ONE MORE CHANCE FOR PG TRB EXAM........... VALGA PALLANDU .............

    ReplyDelete
  14. hai ..
    vijaykumar chennai sir ..
    vat about for today hearing cases ..
    any improvement sir ..

    ReplyDelete
  15. Maths paper 2 ku ethanai posting increase aakum?

    ReplyDelete
  16. through RTI we ask some information means within how many days they will reply.anybody know means plz reply

    ReplyDelete
    Replies
    1. 30 days (your acknowledgement date wise)
      if they are not give the answer you will appeal the appellate authority (higher grade) next thirty first day date.
      senthilkumar.v

      Delete
  17. they didn't send acknowledgement

    ReplyDelete
    Replies
    1. WAIT AND SEE if you not get acknowledgement within week you conform your post office . then you proceed your next step (appeal).

      Delete
  18. Mr சிவகார்த்திக் sir,

    உங்களது comment ஐ இப்பொழுதுதான் படித்தேன்,நீங்கள் என்னைப் பற்றி என்ன சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியாது.கடந்த ஒரு வார காலமாக கல்விசெய்தியை நான் சரிவர பார்க்கவில்லை.

    "ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
    தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
    பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே."

    என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது.ஆனால் என்னைப் பொறுத்தவரை கல்விசெய்தியிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. dear maniarasan sir, i want 11th and 12th std mid term syllabus for bio-zoology.. hw i get it pls help me sir....

      Delete
    2. அந்த syllabus என்னிடம் இல்லை sir,

      Google இல் தேடிப் பாருங்கள்.விடை கிடைக்கலாம்.

      Delete
    3. nandri nanbare... already i searched.. but i cann't got it...

      Delete
  19. mani sir ...
    vat abt today hearing cases ?

    ReplyDelete
  20. mani sir tamil bc ku cutoff evlo sir

    ReplyDelete
  21. Replies
    1. Mr செல்வ குமார்,Mr மணி, Mr.dhayalandeepa@gmail.com,

      இந்த cut-off மதிப்பெண் பற்றி யாருக்குமே தெரியாது.எனக்கும் தெரியாது.இன்னும் காலிப் பணியிட விவரம் குறித்தே தெளிவான விளக்கம் கிடைக்காத பொழுது cut-off மதிப்பெண் பற்றி எழுதுவது அறிவின்மை.

      வழக்கின் நிலை குறித்து வழக்கை முன்னின்று நடத்தும் நண்பர்களிடம் விசாரித்து எழுதுகிறேன்.

      Delete
    2. maniyarasan sir adutha murai posting podum pothu namaku munnurimai alipargala. apadi alike vital nammal case poda mudiyuma

      Delete
    3. முன்னுரிமை வழங்க மாட்டார்கள் madam.அடுத்து நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களோடு உங்களது weightage மதிப்பெண்ணும் கலந்து அதில் அதிக weighatge பெற்றுள்ளவர்களுக்கே பணி வழங்குவார்கள்.

      அப்படி முன்னிரிமை வழங்கினால் இன்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு கூட இருக்காது.அதோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு TET தேர்வு நடத்த வேண்டிய அவசியமும் இருக்காது

      வழக்கும் தொடர அதற்கான முகாந்திரம் இல்லை. ஏனெனில் TET தேர்வின் விதிமுறையிலேயே இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

      Delete
    4. IPPO VACANT LIST SOLURAVANGA ITHA JLUY 2013 SOLLI IRUNTHA , EXAM'KU MENEKETTU IRUKKAVENDIYATHILLA, IVALAVU CASE FILE AGI IRUKKATHU , EVALAVU TIME(MAN HOURS) WASTE , IVANKALA KEKKA YARUMAE ILLAYA???????

      Delete
    5. maniarasan sir! apo nethu siva kathik sir yellarukum batchwise posting poduvarnu sonnadhu confirm news elliya? has 33000 bt teachers no way to get job this year?

      Delete
    6. அரசாணை குறிப்பில் அவ்வாறு இல்லை madam.

      Delete
  22. SELECTION LIST VARUMA INNAIKKU

    ReplyDelete
    Replies
    1. We too travelling on the same boat sir.. Trb only knows the ans for ur question. Best of hard work for every only..

      Delete
  23. prathap sir is it confirm ah????shall we expect result today??/

    ReplyDelete
    Replies
    1. TRB முடிவில்
      அதிரடி மாற்றம்
      ...theinbornteach
      ers.blogspot.in

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  24. adutha murai posting podum pothu namaku munnurimai alipargala allathu ovvoru varudamum naam exam eluthi kondae eruka venduma

    ReplyDelete
    Replies
    1. கவலையே படாதிங்க அடுத்த tet exam hall ticket reg no உங்களுக்கு தான் first வரும் கண்டிப்பா postingu முன்னுரிமை தர மாட்டாங்க

      Delete
  25. geetha mam..as per right to edu all teachers should clear tet...vality for 7 years...using weighta method candidate ll be selected for govt teach post...so every year they ll conduct exam...its our choice to write exam...but if u think ur weigh is low then write it and improve ur weigh...but no priority for tet cleared persons....i think i cleared ur doubt..

    ReplyDelete
  26. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்.) தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதும் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நிலைத் தேர்வில் நடத்தப்படும் சி-சாட் எனப்படும் திறனாய்வுத் தேர்வு ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. சி-சாட்1, சி-சாட் 2 ஆகிய தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டு வினாத்தாள்களில் சி-சாட் 2, ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களால் மட்டுமே எழுதக் கூடிய வகையில் மிகவும் கடினமாக இருக்கிறது.

    முதல்நிலைத் தேர்வில் நடத்தப்பெறும் திறனறித் தேர்வில், ஆங்கில மொழிப் பயிற்சி உள்ளவர்களால் எளிதில் எழுதி வெற்றி பெற்று அடுத்த கட்டத் தேர்வுகளுக்குச் செல்ல முடியும். ஆனால், ஆங்கிலம் கற்கமுடியாத ஏனைய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு, முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்து வருகின்றனர்.

    தாய்மொழியில் திறனறித் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள், குடிமைப் பணி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும். கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திறனாய்வுத் தேர்வை ஆங்கிலத்தில் நடத்தும் முறையைக் கொண்டு வந்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2012-இல் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், இது குறித்து ஆய்வு செய்திட மார்ச் 2014-ல் மூன்று உறுப்பினர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை இன்னும் தயாராகவில்லை. இதற்குள் ஆகஸ்டு 24-ஆம் தேதி குடிமைப் பணிக்கான முதல் கட்டத் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் நுழைவுச் சீட்டுகளை ஜூலை 24 ஆம் தேதி முதல் வழங்கத் தொடங்கி இருக்கின்றது.

    அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. முதல்கட்ட திறனாய்வுத் தேர்வை மாணவர்கள் எழுதும் வகையில் மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதுவரையில் ஆகஸ்டு 24–ந்தேதி நடத்த இருக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் கட்டத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

    ReplyDelete
  27. Replies
    1. Paper 1 notification first vidungappa எவ்வளவு vacant தெரிஞ்சா நம்ம வேலைய பார்க்கலாம்

      Delete
  28. ஆசிரியர் தமாசு தேர்வு 2014 எப்போது?

    ReplyDelete
  29. Kandipa varum dont feel deepan

    ReplyDelete
  30. i am thiyagarajan, english 57.3 mbc ortho male POSTING CHANCE IRUKKA

    ReplyDelete
  31. i am thiyagarajan, english 57.3 mbc ortho POSTING CHANCE IRUKKA
    anybady tell me plz pa,,,

    ReplyDelete
  32. Maniyarasan sir I am chinnasalem pls give ur cndct no

    ReplyDelete
    Replies
    1. உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரியபடுத்துங்கள்.அல்லது armaniyarasan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அலைபேசி என்னை அனுப்புங்கள்.

      Delete
  33. bc w maths 67.9 ... job illanu mudivayiduchu, thaniyar school la
    TET pass pannavanga yaarum inga varathinga appadinnu solranga naan enna panrathu...?

    ReplyDelete
  34. mr Ramesh iam also chinnasalem callme 9095859575

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. ப்ளீஸ் லிஸ்ட் விடுங்கடா.....அவ அவ வா அவ வா அவ்வா அவ்வா........

    ReplyDelete
  37. poongappa naan poi Phd., mudichuttu vanthurrein.

    ReplyDelete
  38. please wait 2 (days or 2 hrs )

    ReplyDelete
  39. புதிய ஆசிரியர்கள் 1382

    தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

    நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

    மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

    ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

    வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

    கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    ReplyDelete
  40. Just now i called trb and asked about today final list she replied softly with that dialogue what is that?? Anybody answer

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 3 week, two r three days, now shortly so step by step reduce the time, we all wait and see what happen.

      Delete
    4. Process is going on... am i right

      Delete
  41. Replies
    1. மிகவும் சரியான பதில்

      Delete
  42. process la erruku am i correct????????????????????????????????

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. TRB ஒரு தொடர் கதை

    ReplyDelete
  45. Pg result vandapo m.phil join panen. Elorum adada m.phil mudikka mudiyadunu sonnangal but I finished exam and my thesis is also completed , tomorrow I am submitting. Very nice govt. I think I'll get job after viva also. So wrote d exam as pg and will join job as m.phil.

    ReplyDelete
    Replies
    1. Congratulation all d best pg pass aaitom bt expectation lil 1 varudam fail aaite irukom nama nilaii ninaitha siripatha aluvathane theriyala God can alone comfort us

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. TRB முடிவில் அதிரடி மாற்றம்
      TRB RELEASE THE CORRECTION WEIGHTAGE MARKS FIRST..NOT SELECTION LIST..THE LIST WILL PUBLISH AFTER THIS..THEY REJECT TO TELL PERTICULAR DATE.. theinbornteachers.blogspot.in

      Delete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete

  48. அடுத்த புரளி ரெடி. கடவுளே புரளி மன்னர்களிடம் இருந்து அப்பாவிகளை காப்பாற்று.

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Enga irundhu sir varinga neenga ellam..

      Delete
    2. Dinesh sir neengal trb chairman ku relation na

      Delete
    3. engala kappatha yarum illaya....alaluku oru poraliya kilapi engala poralee akathinga sir...if u know the information with source tell to us...dont create rumors..

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. Mr.pratahap unga blogspot ku advertisment pannathinga...

    ReplyDelete
  52. TRB முடிவில் அதிரடி மாற்றம்
    TRB RELEASE THE CORRECTION WEIGHTAGE MARKS FIRST..NOT SELECTION LIST..THE LIST WILL PUBLISH AFTER THIS..THEY REJECT TO TELL PERTICULAR DATE.. theinbornteachers.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. sir.trb officials told the news to release final list before 1st of augu...they didnt tell anything about correct list...

      Delete
  53. TRB முடிவில் அதிரடி மாற்றம்
    TRB RELEASE THE CORRECTION WEIGHTAGE MARKS FIRST..NOT SELECTION LIST..THE LIST WILL PUBLISH AFTER THIS..THEY REJECT TO TELL PERTICULAR DATE.. theinbornteachers.blogspot.in

    ReplyDelete
  54. siva karthi sir,pls update the news.your words are very hopeful to us

    ReplyDelete
  55. Is there any chance this PG Vacancy will be filled from the 2013-14 exam only

    ReplyDelete
  56. புதிய பணியிடங்கள் அனைத்தும் தமிழுக்கு ஒதுக்குங்கள் Trb

    ReplyDelete
  57. Velmurugan sir why this kola very

    ReplyDelete
  58. நீங்க வேண்ணா பாருங்க ஆயா புதிய பணியிடங்கள் அனைத்தும் மலையாளத்துக்கு தான் ஒதுக்கும்

    ReplyDelete
  59. இலவு காத்த கிளி , இலவு காத்த கிளின்னு ஒரு கதை இருக்கு தெரியுமா? தெரியலைன்னா சொல்றேன் கேளுங்க . கிளி ஒன்னு இலவமரத்துல குடியிருந்துச்சாம் , அந்த மரத்துல இருந்த பூவ பாத்து , இது காயாகி , பழமா இருக்கும்போது சாப்பிடுவேன்னு உள்ளுக்குள்ள ஆசையை வளர்த்துகிட்டு இருந்துச்சாம் , ஒரு நாள் அந்த இலவம்பழம் வெடிச்சு அதுல இருந்து பஞ்சு வந்ததை பாத்து அதோட நெஞ்சு வெடிச்சுதாம். வெடிச்சது பஞ்சு மட்டும் இல்ல அந்த கிளியோட கு கு கு குட்டி நெஞ்சும் தான் . இதே இலவு காத்த கிளி விஷயத்தை தான் வடிவேலு ,தலைநகரம் படத்தோட நகைச்சுவை காட்சியில நடிச்சிருப்பாரு,ரொம்ப காமெடியாவும் இருக்கும். பாக்குற மற்றும் கேக்குற நமக்கு மாட்டும் தான் காமெடியா இருக்கும். ஆனா உண்மையா அந்த வடிவேலுவோட கதாப்பாத்திரமோ அல்லது கிளியாகவோ நாம வாழ்ந்து இருந்தா தான் தெரியும் கிடைக்கும்னு நினைக்குற பொருள் கிடைக்காம போறப்ப கொடுக்குற வலி . இந்த மாதிரி நம்ம நிஜவாழ்கையில நிறைய இலவு காத்த கிளிகளை மனித வடிவுகளில் பார்த்திருப்போம். நாம கூட இந்த இலவு காத்த கிளியா எத்தனை முறை இருந்திருப்போம்?

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்ணீர்கள் நண்பரே....
      நம்முடைய வலியும் வேதனையும் அரசியல் கூத்தாடிகளுக்கு எங்கே தெரியப்போகிறது....

      Delete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. Hai Teachers! I'M Guru Moorthy (English) I"M the State Third Rank Holder in the TET Paper 2 (2013). Any queries? please call me

    ReplyDelete
    Replies
    1. wat is ur mark and weightage?

      Delete
    2. Thambi Guru Moorthy Mark and weightage kekuranga sollupa..

      Delete
    3. Any queries? please call me....
      nu comment potutu mobile number engada.....

      Delete
    4. English la Hai nu our word kidayathu... Neyellam our English teacher....

      Delete
  62. no appointment for bt,sgt,pg:

    government has no funds...govt not willing to appiont new techers.

    example

    300 bt teachers vacant created and filled by PANI NIRAVAL ONLY...from cm speach..

    so excess bt teachers erukum pothu...........epadi new teachers apointment nadakum?

    y cm not talking even single word about apointment?


    ReplyDelete
  63. Maths bc wt 69.3 job kidaika chace iruka anybody reply me

    ReplyDelete
  64. TRB pg assistant 2011-2012 batch tamil medium reservation candidateskey inum oru bathilayum kaanom atharkul 2012-2013 batchku yepadi vidai kidaikum poraadavum yaarum thayaaraaga illai kural kodukavum thayakkam yenadhaan saathikka pokireerkal kuripaaga 2011-2012 batch yegaloda exam yeyluthiyavarkal jobku poi 2 years aachu but tamil mediumla padicha naanga mattum niruthivaikkappattu ullom atleast reason yenna alathu yeyppa posting poduvaanga yeythaavadhu onnu therindhaal podhum konjam aarudhalaaga irukum adhuvum illai oru seithiyum illai niraiya peyrukku 2011-2012 batchla posting podaama pending irupathey theyriyaadhu onum solvadharkillai thayavu seithu anaivarum ondru koodumpadi thaalmaiyudan keyttu kolkirain thangavel-9976147773

    ReplyDelete
    Replies
    1. dont worry sir unkaluku jop first potta vatty than 2013 jop poduvanka ok

      Delete
  65. Today G.O ku againstana casela court TRB ku notice anupirukam. Inta caseoda judgementa poruthu than asiriyar niyamanam amayum nu jude solirukaram. SRI, VIJAKUMAR, CHENNAI AND MANIYARASAN sirs ithu unmaya?

    ReplyDelete
  66. Today G.O ku againstana casela court TRB ku notice anupirukam. Inta caseoda judgementa poruthu than asiriyar niyamanam amayum nu jude solirukaram. SRI, VIJAKUMAR, CHENNAI AND MANIYARASAN sirs ithu unmaya?

    ReplyDelete
    Replies
    1. notice இன்றைக்கு அனுப்பினார்களா இல்லையா என்பது தெரியாது.ஆனால் காலிப் பணியிடங்கள் குறித்த விளம்பரம் வெளியான போதே W.A.No. 707& 708 of 2014 and
      M.P.No. 1 and 1 of 2014 போன்ற வழக்குகளுக்கு உட்பட்டுதான் பணி நியமனம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

      இதில் 707& 708 என்பது முறையே weighatge மற்றும் relaxation குறித்த வழக்கு எண்களாகும்

      Delete
    2. Today case not reached in time. Tomorrow continue.

      Delete
    3. W.A. No. 707, 708 both are relaxation cases.
      W.A. 944 weightage case

      Delete
    4. Vijaykumar chennai sir any idea about final list

      Delete
  67. hai mani sir pg news ennachu pls reply and any one pls reply.....

    ReplyDelete
  68. Mani sir pg pattrri therinthal sollunga sir please sir

    ReplyDelete
    Replies
    1. madam saravanan g, saravanan g sir,

      pg யை குறித்து எந்த தகவலும் எனக்குத் தெரியாது.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி