வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2014

வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.


இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

தமிழ்நாட்டில் 38 அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. இவை தவிர சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிநிறுவனங்கள் 454 இருந்தன. சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.அதில் 2 ஆயிரத்து 240 பேர் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில்மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஏராளமான பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடக்கவில்லை.

100 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

காரணம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, அதில் அதிக மார்க்கு எடுத்தால்தான் ஆசிரியர் வேலை வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த வருடம் மட்டும் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெற்றால் அதன் முடிவு விரைவில் வெளியிடப்படுகிறது. ஆனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதினால் அதன் முடிவு வர குறைந்தபட்சம் 6 மாதம்ஆகிறது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த புகார் அரசு தேர்வுத்துறை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விமற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடமும் எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வருடம் விரைவில் தேர்வு முடிவை வெளியிட அரசுதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இணைப்பு பயிற்சி

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் இந்த வருடம் சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு இணைப்பு பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) கடந்த 23–ந்தேதி முதல் 1 மாதம் நடத்தப்படுகிறது. இதில் கல்லூரிஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகியவற்றில் தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பயிற்சிஅளிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி