புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்; 192 பள்ளிகள் தரம் உயர்வு: 1,682 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2014

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்; 192 பள்ளிகள் தரம் உயர்வு: 1,682 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - தினத்தந்தி


புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் புதிதாக 1,682 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்

செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக்கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

கட்டாய கல்வி

2. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

நிலை உயர்வு

4. நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

நிரந்தர முடக்கம்

5. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

பயிற்சி ஏடுகள்

6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கழிவறைகளை கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத்திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப்பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10–ம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறை பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

5 உண்டு உறைவிடப்பள்ளிகள்

8. தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப்பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக்கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித்திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும்.

கூடுதல் வகுப்பறைகள்

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித்தரப்படும்.

11. 2013–14–ம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.

சிறப்பு பயிற்சிகள்

12. சிறப்பு கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும்.

13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக்கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

28 comments:

  1. அட போங்கப்பா வெறும் வாய் பேச்சி தான்.
    ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையே.,

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று .

    ReplyDelete
    Replies
    1. கொங்கு நாட்டின் வரிபணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு சென்றது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிபணத்தை பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார் அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம்

      "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பரித்ததாகச் சொல்" என்று சொல்லி அனுப்பினார் அன்று முதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்று வழங்கலாயிற்று....

      போரில் தீரன் சின்னமலையை வெல்லமுடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சிமூலம் மாவீரன் சின்னமலையை கைது செய்து சங்ககிரி கோட்டைக்குச் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,1805 அன்று தூக்கிலிடப்பட்டார்கள் அப்பொழுது தம்பியரும், கருப்பசேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.......

      இத்தகைய மாவீரனின் நினைவு தினத்தில் நாமும் அனுசரிப்போம்.....

      Delete
    2. super sir satyaraj, thanks for your information. vazhaga thiran sinnamalai pugazhl.

      Delete
  4. Sri அரட்டை அரங்ம் Chatroom ஆரம்பித்தால் நாங்கள் கருத்து பரிமாற எளிதாக இருக்கும்

    ReplyDelete
  5. CM ANNOUNCEMENT EXPECTED TODAY OR TOMORROW BEFORE PUBLICATION OF SELECTION LIST BY TRB FOR TET:

    Counter report(proper reply) by our honourable present CM about Edn dept + SGT vacant issue raised by former CM Kalaignar & Veeramani. - in ongoing assembly within fee days.

    Along with that following announcements r expected by various wings of edn dept.

    (New primary schls, upgrade announcement of high & higher sec schls + various new schemes already announced yesterday)

    1. Present appointment count of
    TET PAPER 1 announcement & its notification from trb.
    (not yet officially declared by tn govt or trb. Though around 4000 count for paper 1 is flashed by sun news, puthiya thalaimurai, we should get the same as official news.)

    2. Present appointment count of
    TET PAPER 2 + additional vacancy + other dept vacancy announcement & its notification by trb.

    (Though many paper news & old official announcement says the count for paper 2 is 10,726 - it would be 'some what increased' to satisfy 42,000 passed tchrs by mentioning 2013-14 count or other dept vacancy excluding schl edn dept. Since the 5% relaxation not given beneficial to most of 42,000 passed paper 2 candidates - some more increase in vacancy is highly expected by all )

    3. 'Separate backlog vacancy announcement' for appointing 'ALL OR MAXIMUM PH TET CANDIDATES' passed via Special TET out of 933+ PAPER 2 candidates & its notification from trb.

    (777 B GRADE - PG + PAPER 2,
    330 C GRADE - SGT PAPER 1 vacancy available for PH. & VISUAL candidates alone in trb as backlog from 2007 upto now. Regarding this proper G.O passed by tn govt to fill around 2000 backlog vacancy of PH candidates in all dept as per High court directions by mar 2014 after the announcement of spl tet. PH & VISUAL associations approached tn govt & many spl tet candidates requested via CM SPECIAL CELL online & in person - to appoint all or maximum spl tet candidates under humanitarian condition as this govt considered spl tet exam with mother-hearted. Since spl tet conducted separately after many claims by visual candidates - most of pwd candidates expecting separate notification for spl tet & maximum appointment from available old backlog vacancy for ph alone in trb)

    After all this - Appointment for all PG, TET, SPECIAL TET in the hands of CM expected soon within August 2nd week as announced by edn minister in assembly already.

    ReplyDelete
  6. There was no way to publish the final list for already written pgtrb exam. It was conducted before one year. When will publish final list ?honourable CM. Please consider our pg posting.

    ReplyDelete
  7. Dear Vijay Kumar chennai Sir, Gd Morn. How R U.. Sir..!

    What about the position of TET Cases especially case filed against G.O. 71 .

    New Chief Judge conducting any TET cases...

    Any Details...... Please share with us ...

    ReplyDelete
    Replies
    1. only cases file panna 25 members than posting tharanu solli irukkakklam .so cases are closed that ...

      Delete
    2. Thank You for your information... Selva sir..

      Delete
  8. I am in trb the official says today not published the selection list result aug 4 or 6 may be published any doubt please call 9791293192

    ReplyDelete
    Replies
    1. will the selection list publish on 6.8 2014???? or 6.8.2015????

      Delete
  9. 66.17 sc maths tamil medium chance iruka?

    ReplyDelete
  10. Mr. பொன் சுந்தர் என்கிற ராம் ராம்,

    please come out from pon sundar to ram ram.

    இரவு பணி, தனிமை. சலிப்பா இருக்கிறதா sir?

    யாரையாவது சீண்டி பொழுது போக்கலாம் என்ற நினைப்பில் உருவான பெயர் தான் பொன் சுந்தர்.உண்மைதானே நண்பரே?

    நானும் சில நேரங்களில் என் கடையில் இரவுப் பணி செய்வேன்.அதனால் ஏதேனும் உபயோகமான தலைப்பில் விவாதம் செய்தால் நிச்சயம் பதிலெழுதுவேன்.

    ஆங்கிலத்தில் தவறாக எழுதி என்னை திசை திருப்பலாம் என்பது உங்கள் நினைவாக இருக்கலாம்.ஆனால் என் மூளை அதையும் தாண்டி செயல்படக் கூடியது.

    ஆனால் நீங்கள்தான் பொன் சுந்தர் என்று உறுதி படுத்தியதற்கான காரணத்தைத் தெளிவாக எழுத மாட்டேன்.

    என்ன sir இந்த comment ஐ படிக்கின்ற பொழுது ஒரு புன் முறுவல் வருகிறதா? சிரித்துக் கொள்ளுங்கள். தவறில்லை.

    உங்களோடு எனக்கும்,கல்விசெய்திக்கும் எந்த சிக்கலுமில்லை.அதனால் நீங்கள் ram ram என்ற பெயரிலேயே comment எழுத வரவேற்கப்படுகிறீர்கள்.

    தயவு செய்து இனிமேலும் நான் ராம் ராம் இல்லை என்று சமாளிக்க வேண்டாம்.

    நீங்கள் உங்களை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டால் நான் என்னை அதி புத்திசாலியாக நினைத்துக் கொள்வேன்.

    welcome back to kalviseithi.

    ReplyDelete
    Replies
    1. Dear mani ungaludaya mozi vanmai rasikka thakkathu athayum neratthayyum venakkathergal pls value our neighbour

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. திரு ராம் அவர்களே,

      அருமையான comedy பதில் sir.

      பொன் சுந்தர் நீங்களா? அல்லது வேறொரு நபரா? என்பது உங்கள் மனசாட்சிக்கும் என் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும் sir.

      இந்த "தமிழ்,தமிழ்" என்ற ஒன்று இருக்கிறதே, அதில் கொஞ்சம் வித்தை காட்டும் அளவிற்கு அதை புரிந்தும் தெரிந்தும் வைத்திருக்கிறேன்.

      சரி நீங்கள்தான் pon sundar என்று எப்படி உறுதிபடுத்தினேன்?

      உங்களை 7 மாதங்களுக்கு மேல் தெரியும்.உங்களது மொழி நடை மட்டுமல்ல பலரின் மொழி நடையும் எனக்குத் தெரியும்.

      1) நீங்கள் எழுதிய kettaya illaiya? ஒரே comment போதும் நீங்கள்தான் அந்த அந்த பொன் sundar என்று.ஏனென்றால் இது போன்ற வாக்கியங்கள் உங்களிடமிருந்துதான் வரும்.

      2) இரண்டாவது அவ்வளவு கோபமாக என்னை கேள்வி கேட்க நினைப்பவர் மரியாதை குறிக்கும் வார்த்தையான Mr, sir போன்ற வார்த்தைகளை உபயோக்கிக்க மாட்டார்.ஆனால் நீங்கள் எப்பொழுதும் என்னை sir, அல்லது திரு என்ற வார்த்தைக்குப் பிறகுதான் எனது பெயரை எழுதுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

      இப்பொழுது கூட மேற்கண்ட பதிலில் கூட பார்த்தீர்களா?

      அதேபோல்தான் உங்களையும் நான் மரியாதையாகவே நினைக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தென் தமிழகம் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தேன்.மதுரையில் இருந்த பொழுது நீங்கள் சொன்னபடி உங்களை தொடர்புகொள்ளவே நினைத்தேன்.ஆனால் குடும்பத்தோடு வந்திருந்ததால் முடியவில்லை.

      இரண்டாவது எனக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது.எதிரியை உருவாக்கிக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள்.ஆனால் ஆரோக்கியமான விவாதம் செய்ய விரும்புவேன்.

      நான் எப்பொழுதே comment செய்வதை அல்லது article எழுதுவதை நிறுத்தியிருப்பேன்.ஆனால் எனக்குவரும் மின்னஞ்சல்களும் அலைபேசி அழைப்புகளும் என்னை எழுத தூண்டுவதாய் அமைகிறது. எனக்கு வரும் email ஒன்றினை இங்கு உதாரணம் காட்ட விரும்பினேன்.ஆனால் அது தற்புகழ்ச்சியாக அமைந்து விடும் என்பதால் தவிர்க்கிறேன்.

      ஒரே ராஜா அதுவும் நானாக இருக்க விரும்பவில்லை.நீங்கள் அப்படி சொல்வதே ஏதோ அதிக பிரசங்கித் தனமாகத் தெரிகிறது.வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருக்கிறேன்.எப்படியாவது எந்த வகையிலாவது மேலே வரவேண்டும் என எண்ணுகிறேம்.ஒருவேளை அப்படி எனது சுய முயற்சியால் முன்னேறி என் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தினால் அப்பொழுது வேண்டுமானால் என் குடும்பத்திற்கு மட்டும் நான் ராஜாவாக இருக்கலாம்.

      இன்னொன்று தெரியுமா? பாடசாலையில் ராஜாலிங்கத்தின் article வரும் முன்னரே அவரிடம் நீங்களும் article எழுதுங்கள், அதை கல்விசெய்தியில் நான் publish செய்கிறேன் என்று நான்தான் கூறினேன்.

      ஸ்ரீ யையும் முதன்முதலாக வரவேற்றது நான்தான்.

      என்னுடன் எப்போதும் விவாதம் செய்யும் திரு அசோக் குமார் என்பவரை தொடர்பு கொண்டு மிகவும் பாராட்டினேன்.

      என்னை பொறுத்தவரை நாம் அனைவரும் தமிழினம்.நாம் அனைவரும் வளர்ந்தால்தான் தமிழ் வளரும்,தமிழகம் வளரும்.அதுதான் என் நிலைப்பாடு.நான் எழுதியுள்ள "தமிழன் என்கிற குணமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" எனும் article தமிழ்,தமிழர் மீதான என்னுடைய எண்ணங்களை வெளிபடுத்தும்.

      எனக்கு ஆதரவு என்பதை விட நான் எழுதும் கருத்திற்கு ஆதரவு அதிகம் என சொல்லலாம்."நான் மட்டுமே ராஜாவாக விரும்புகிறேன்" இருக்க விரும்புகிறேன் என்ற ஒற்றை வாக்கியமே அதை பறை சாற்றும்.

      நான் உங்களை கல்விசெய்திக்கு வாருங்கள் என கட்டாயமாக அழைக்கவில்லை.ஆனால் பொன் சுந்தர் என்ற பெயரில் நீண்ட காலத்திற்கு பின்பு கல்விசெய்தியில் comment எழுதியிருந்ததால் ஒரு formality காக welcome back என்று எழுதியிருந்தேன்.மற்றபடி எல்லாம் உங்கள் விருப்பம்.

      எப்பொழுதும் யாரும் எனக்கு எதிரி இல்லை.நான் யாரையும் அப்படி நினைப்பதுமில்லை.

      Delete
    4. Mani sri satheesh and all my brothers and sisters ellorum porumai kakka vendum bharathiyin follower maniyarasanuku ipadi oru unarchivasapadum panbu epadi vsnthathu

      Delete
    5. அக்கா ஒரு mail கூட பண்ண மாட்டீங்களா?

      Delete
    6. Mani nan veedu swift pannathala net connect Pannalapa ipathan Android phone vanginen melum nan tnpsc il judicial dpt il join panniten athanal mail pakka time illai oru kathavai pootiya kadavul oru kadavai thiranthu vitar 39 vayathil nambikkai vaiyungal tnpsc ku ready agungal ellorum

      Delete
  11. MR.MANIYARASAN RANGANATHAN SIR PON SUNDAR CMT IL VARUPAVAR RAM RAM SIR ILAI ENRU NINAIKAREN ANY WAY SIR UNGALATHU KELVIKANA PADHILAI RAM SIR PADASALAI WEP IL KODUTHULLAR SIR JUST UNGALUKU INFORM PANINEN ITHARKUM ENAI THITIVIDATHIRGAL THANK U SIR

    ReplyDelete
    Replies
    1. dharshini haarathy madam,

      என்னை நீண்ட காலமாக கவனித்து வந்திருந்தால் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள்.

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. Tomorrow result Will come or not

    ReplyDelete
  14. Tomorrow 10am bt asset selection list relised

    ReplyDelete
  15. Tomorrow 10am bt asset selection list relised

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி