வேளாண் பல்கலை.க்கு 172 புதிய பேராசிரியர்கள்: பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2014

வேளாண் பல்கலை.க்கு 172 புதிய பேராசிரியர்கள்: பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கினார்.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள172 உதவிப் பேராசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியானது. இதற்கு, ஆயிரத்து 850 பேர் விண்ணப்பித்தனர்.

இதில், பரிசீலனைக்கு பிறகு 948 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு கடந்தஜனவரி 21 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் வகுப்பு வாரியாக மொத்தம் 172 தேர்வு செய்யப்பட்டனர்.இப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டன.முதற்கட்டமாக, ஏழு பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா புதிதாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு உத்தரவுகளை வழங்கினார்.

மீதமுள்ள 165 பேருக்கும் பணி நியமனஉத்தரவுகள் அன்றைய தினமே வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வேளாண் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. Scool education deparment junior asst order tnpsc koduthu 3month aachu but department order eppo koduppinga amma.....pls konjam quicka valankungal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி