குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம்.


நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.தேனியில் நேற்று எட்டு தேர்வு மையங்களில் குரூப் 1 தேர்வு நடந்தது.

தேர்வில் பங்கேற்க 2,838 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.இதில் 1483 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.தேர்வு குறித்து கூறியதாவது:

பி.தினேஷ்பாபு, தேனி முல்லைநகர்: இந்த தேர்வு எழுதினால் எந்தெந்த பணியில் சேர்ந்து பணியாற்றுவோமோ, அந்த பணியில் சேரும் தகுதியை நிர்ணயிப்பதற்கு ஏற்ற வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் கடுமையாக உழைத்தவர்கள் மட்டுமே தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்க முடியும்.

ஆர்.கருப்பசாமி, தேனி: பெரும்பாலும் கணக்கு பகுதியில் இருந்து அதிக கேள்விகள் வந்திருந்தன. பொது அறிவு, சமீபத்திய நடப்புகள் குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. எல்லாமே கடுமையாக இருந்தன. எதற்குமே சுலபமாக பதிலளிக்க முடியாது.

கே.கனகசுந்தரி, கோட்டூர்: அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள், கணக்கு தொடர்பான கேள்விகள் அதிகம் இருந்தன. எதிர்பார்க்காத கேள்விகளே அதிகம். பல்வேறு கோணங்களில் எழுதுபவரின் புத்திசாலித்தனத்தை அறியும் வகையிலான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

எம்.நந்தினி, தேனி பழனிசெட்டிபட்டி: உலக நடப்புகளில் கடந்த 4 ஆண்டுகள் நடந்தவை தொடர்பான கேள்விகள் இடம் பெற்று இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கும் மேற்பட்ட காலங்களில் நடந்தவைகள் இடம் பெற்று இருந்தன. உலக அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

பி.நவநீதன், ரெங்கமநாயக்கன்பட்டி: 6ம் வகுப்பு புத்தகம் முதல் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. வெளிக்கேள்விகளே அதிகம் இடம் பெற்றுஇருந்தன. இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி