நடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

நடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு.


தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு சாதனம் இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.38 லட்சம் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுவார்கள்.

2014-15-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும். இந்தக் கல்வியாண்டில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32 ஆயிரத்து563 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.2014-15-ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

சிறப்பு ஆசிரியர் பணியிடம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில்202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.நடப்புக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரத்து 140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடம்:

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 71 ஆயிரத்து 708 ஆசிரியர் பணியிடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2014-15-ம் கல்வியாண்டில்,3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், (முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18), 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் (உதவியாளர் 152, இளநிலை உதவியாளர் 188) நிரப்பப்படும்.

நடமாடும் நூலகம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு வழங்கப்படும். 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகம் செய்யப்படும். இலவச விளையாட்டு பொருள் தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள்ரூ.6 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.மாநிலத்தில் முதற்கட்டமாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நூல்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். அரிய நூல்கள் பாதுகாப்பு இந்தியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த, விலைமதிப்பற்ற, அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் நூல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ரூ.7.50 லட்சம் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

38 comments:

  1. KIND REQUEST TO OUR HONORABLE CM:

    (Definitely 3459 vacancies belonging to 2014-2015 wil not b alloted & not filled for tet 2013 & spl tet 2014. Bcos it is the vacancy for forthcoming new tet nov 2014 & pg trb.

    2012-13 =10700 vacancies
    2013-14=?
    2014-15=3459.

    All r quit surprise & eating the hearts of all tet candidates.)

    Only if our honorable CM increases present post as 5000 or above for tet 2013 paper 2 (10700+5000 wil get job out of passed 43,000) & atleast upto 1000 for spl tet(only 933 +few passed in spl tet 2014) - all the true hardworkers of tet (everlonging voters who polled in mass in MP election wit confidence of getting job soon for the hardwork alone) would somewhat get satisfied.

    Bcos last tet just filled wit qualified mark alone.

    All dreams of scorers above 100 brokes bcos weightage makes them to suffer. Even the scorer frm 5% relaxation of 82-89 didn't benefitted by this weightage.

    Candidates really admired abt tn govt tet advertisement while tet 2013 announced & conducted. Bcos only mere hardwork in tet like previous exams make them a govt tchr many (more than 40,000 burnt their midnight oil completely) put hardwork more. While all passed tet candidates get job before all our eyes, the tet boosted all to work hard & await for last 300 days.

    But now all gone vain. Present testing of the talent differed frm last tet. Those who missed job by 1-3 marks frm last tet worked hard & scored above 110. But the mode of weighing skill differed.

    Atlast only pain everlasts in all hearts of tet candidates on seeing least vacancy in trb notification.

    Only our CM wil hav the medicine for all by increasing the vacancy wit mother hearted for all longing sorrowful dried wounded tet hearts.

    All tet candidates understood that the most talented 10700 tchrs gets job by new weightage. But the hardworkers in tet mark above 90 just need somemore additional vacancy bcos they hav no option to increase their Hsc Ug B.Ed% hereafter.

    Only if 15 PH candidates (5 PH ORTHO & 10 VISUAL) selected frm announced notification for TAMIL PAPER 2 (500 VACANCIES) - all PH would get highly wounded & totally get vexed why more than 1000 paper 2 Tamil candidates wrote this exam just for 15 Tamil paper 2 - PH posts.

    UNDER 110 ARTICLE, ALL TET 2013 & SPL TET 2014 CANDIDATES - EXPECTING ADDITIONAL VACANCIES TO B ANNOUNCED BY OUR CM SOON IN ASSEMBLY FOR PRESENT APPOINTMENT.
    (along with the announcement of upgrading 100 Higher sec schools & 100 high schls)

    40,000 childhood heart of passed tet candidates longing for the announcement of our CM equivalent to praying their own real mother to increase additional tet vacancies.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. FRIENDS SURELY GO 71 WILL BE CHANGED BY COURT DIRECTION THOSE WITH LOW ACADEMIC MARKS AND HIGHER TET MARK DONT LOSE HOPE

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Mr. venki sir, u give hope to candidates with higher tet marks and low academic marks. good. Previously, Judge didn't give any order to follow the court's wgt. system (existing). Just he gave example for scientific method. But our TRB follow the same what mr. judge told. TRB didnot think about all aspects. I think there is no staffs to analysis these type of aspects.

      Even IAS, IPS, IFS, IES ETC., examination they are not following the academic marks. This TET is lower grade than the above mentioned examination.
      Because of the name of the TET examination these type of problems are creating.

      This is general that the academic marks are changing year to year. Reference: state average.

      Any way mr. venki I pray god that all the hard word and honest candidates will get the job.

      Delete
    6. thankyou mr.venki.g.o71 should be changed..

      Delete
    7. thankyou for your support mr.sairam..

      Delete
  2. மதிப்பிற்குரிய
    கல்விசெய்தி admin அவர்களுக்கு இந்த ஆண்டு pap1 பணியிடம் நிரப்பபடுமா?
    எப்போது ? என்பதை கேட்டு தெரிந்தவுடன் பதிலிடவும். இது பல்லாயிரக்கணக்கான
    pap1 சகோதர, சகோதரிகளின் கண்ணீர் வேண்டுகோள், pls reply "KALVISEIHI ADMIN"

    ReplyDelete
    Replies
    1. i call yesterday sir twenty days agumnu sonnanga

      Delete
    2. என்ன
      mam சொல்றீங்க 20days சொன்னாங்கலா? என்கிட்ட இந்த மாத இறுதினாங்க. pap2
      வோடு posting போட்டாதா உண்டு pap1 மட்டும் தனியா posting போடமாட்டாங்க. so
      tiz yr pap1 பணிநியமனம் இல்லை என நினைக்கிறேன். so GOOD BYE frm கல்வி
      செய்தி. வாழ்க trb,govt....

      Delete
  3. Everything is a political game... CV mudinjadhum job potrundha ivlo problem vandhurukadhu.... 5% relaxation edhuku koduthanga???? endha use im ila... relaxation kodukalana next TET kavadhu prepare panirupom... ivlo nal waste dhaney? ini padichu pass ahi, wtg potu, CV, poi velangirum... padichu ipdi pala poradhuku adu mechu all ahirukalam....

    ReplyDelete
  4. pap1 provisional list எப்போது வெளிவரும். plz pap1 நண்பர்களே அனைவரும் trb க்கு call பண்ணுவோம்.dont boycot tis cmments

    ReplyDelete
    Replies
    1. sir wat problem for paper 1?

      somebody says paper 1 ku seniority or weitage ah nu enum decide pandala nu.......

      is it true............?

      Delete
    2. paper 1 ku employment seniority vara possible eruka?

      or weitage tha varuma?

      Delete
    3. paper 1 ku cases file pani erukangala?

      in supreme court,high court?

      pl tell mr. vijaya kumar chennai sir......

      Delete
    4. அன்னியன் சார் pap1 பொறுத்தவரை என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை?

      Delete
  5. திரு வீரமணி ஐயா அவர்களே கடந்த ஆணடு மற்றும் அடுத்த கல்வி ஆண்டு பணியிடங்களை அறிவித்த நீங்கள் ஏன் தற்போது நிரப்ப இருக்கும் காலி பணியிடங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட அறிவிக்கவில்லை.
    நேற்று எங்களின் எதிர்பார்ப்புகளுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே

    ReplyDelete
  6. History bc 61.61 English medium mark 94 job kadaikuma any reply me

    ReplyDelete
  7. ungalukku 100 % job kidaikkum but romba thurama kidaikkum .neega ethipaartha idam kidaikaathu boss.

    ReplyDelete
    Replies
    1. Suresh sir
      Velai Ella pattathari( tet candidate) Ku polama when I'll party I waiting now

      Delete
  8. 30 ந்தேதி யும் கேள்விக்குறி தான்.

    ReplyDelete
  9. The govt main aim is transformation of public sector into private sectors very soon all the government school converted to private school the govt have no interest to improve the government school it is reflect the kalvimaanya korikkai

    ReplyDelete
  10. Capitalization economy ஜனநாயகத்தில் ஒரு முதலாளித்துவ கொள்கை இந்திய பொருளாதாரத்தில்.கல்விச்செய்தி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பள்ளி ஆரம்பித்துவிடலாம்.இதற்க்கான முயற்சியில் கல்விச்செய்தி ஈடுபடலாமே.முயர்ச்சி இருந்தல் வானமும் வசப்படும்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6

    EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY:
    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM"

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2
    SO REMAINING 7694 POSTS WIL B QUICKLY ANNOUNCED BY OUR CM TO APPOINT.
    IN THAT IF FOR PAPER 1 -1500-2000 POSTS ALLOTED MEANS - REMAINING AROUND 6000 POST'S WIL B ANNOUNCED FOR
    PAPER 2 & spl tet SOON]

    ReplyDelete
    Replies
    1. hello sir epadi ellam think pani think pani tha nama polapu epadi ayutu eruku....................

      govt a nambi ethuvum expect panathenga.......................

      and unga calculation la pg missing................

      Delete
    2. S Mr siranjeevi viramani says 71thousand approval 53thousand finished. Balance vacancy this year fill pannuvomnu .but athula p2ku evlonu theriyala

      Delete
    3. what 1500 to 2000 only for paper 2??????????????????????? then why they condect exam????????????????????????????/

      Delete
  13. Paper1 posting illaya maniyarasan ,,,jeyapriya,,,,vijayakumar,,,,yaravathu pathil iruntha sollungal

    ReplyDelete
  14. sir satheesh solunga .... priyavadhavukka vadhu posting unda???????? avanga case pottathala thanae weightage visvaroopam eduthathu. adhan ketkiraen avangalukkavdhu use acha? INIMAL INDHA WEIGHTAGE ALLA naan tet eluthi 130 mark vanginathanae bc ennakku posting undu because i am low weightage. so i loose my confidence in coming tet also TRB (because 900 some thing post) i am maths major now my weightage is 62.35

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற உங்களால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறமுடியாதா?

      உங்களின் கணித துறை மிகச்சிறந்த துறை நீங்கள் முயற்சி செய்தால் மூன்றே மாதங்களில் எப்படிப்பட்ட தேர்வையும் தேர்ச்சி பெறலாம்

      எல்லாமே உங்களின் தன்னம்பிக்கையில் தான் உள்ளது

      சங்கீதா என்ற ஒரு இளம்பெண் பற்றி கேள்விபட்டுருக்கிறீர்களா?

      அவங்க கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திருச்சி பேருந்துநிலையத்தில் 2 கோடி பணத்தை கைபற்றினார் ( ஓட்டுக்காக மக்களுக்கு கொடுக்க இருந்த பணம்) இந்த வீர செயலுக்காக தமிழக முதல்வர் கைகளால் "வீரமங்கை" எனும் பட்டத்தை பெற்ற குரூப் 1 அதிகாரி தான் அந்த இளம்பெண் சங்கீதா

      ஆனால் அவங்க VAO தேர்வில் ஒரு மதிப்பெண்ணில் பணியை இழந்தவங்க இருப்பினும் சோர்ந்து போகவில்லை VAO தேர்வில் தோல்வி அடைந்த அந்த பெண் அடுத்து நடைபெற்ற குரூப் 1 தேர்வில் வெற்றி
      அந்த பெண்ணின் முயற்சி எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள்

      இந்த திருச்சி உண்மை நிகழ்ச்சி கூட சமீபத்தில் வெளிவந்த
      "நிமிர்த்து நில்" படத்தில் ஒரு காட்சியாக படமாக்கபட்டது

      முயற்சி செய்யுங்கள் வெற்றி (மாபெரும் வெற்றி) பெறுங்கள்

      Delete
    2. how to get above 90 passed candidates list.... please any one tell me.........

      Delete
    3. super realy very good motivation mr.satheesh...

      Delete
    4. thank u satheesh sir for ur kind reply

      Delete
    5. Thanks Mr Kalai raja & nagaraj sivanandham...

      Delete
  15. Friends yarukavathu en kelviku pathil therinthal sollunga 2014,2015 vaccant namala vachu tet candidates vachu nirapuvargala allathu next exam vachu nerapuvargala 2013-2014 vaccant iruka illaiya antha vaccant namakaka illaya

    ReplyDelete
    Replies
    1. as per their previous announcement you will eligible for next 7 years but every year they will see weitage . so please dont thing tet go and try any other job

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி