ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்.


சங்கராபுரம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒரு மாதமாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு தமிழ்ப் பாடத்திற்கு மட்டுமே ஆசிரியர் உள்ளார். மற்ற பாடங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் கூட இல்லை. 33 ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் தற்போது 10 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.பள்ளி திறந்து 50 நாட்களாகியும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை நியமிக்க கோரி அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

இதனால் நேற்று காலை அரசம்பட்டு - சங்கராபுரம் சாலையில் பள்ளிக்கு முன்பாக மாணவ மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன், துணை தாசில்தார் ரகோத்தமன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் பேச்சு வார்த்தை நடத்தினர்.வேறு பள்ளியிலிருந்து சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதால் மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.மறியலால் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி