ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?


ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்கள்தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத தேர்ச்சி இலக்கை அடையஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் தயாராக உள்ளநிலையில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளன. ஜூன் 17-29ம் தேதி வரை கலந்தாய்வில்ஏராளமான, ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய பள்ளிகள், சொந்த மாவட்டங்களுக்குபணியிட மாறுதலாகி சென்று விட்டனர். இதனால் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ள 225 பணியிடங்கள், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களால் தின வகுப்புகள், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த இயலவில்லை.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,""மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,''என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி