TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.

இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. 

அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

23 comments:

  1. சென்ற ஆண்டு இவ்வாறு படித்து நிறைய பேர் பணியில் சேர்ந்து உள்ளனர்..வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளனர்..இதை அப்போதே கூறியிருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. வெய்டேஜ்
      சரிபார்ப்பில்....பி.லிட்.பி
      எட் க்கு பதிலாக
      பி.லிட்.டி.டி.எட்
      சேர்த்துக்
      கொள்ளப்படுகிறது... detail
      http://
      www.theinbornteachers.blog
      spot.in/

      Delete
    2. hai prathap how to enter the data of wtg... that link there is not available... how to get that.....

      Delete
    3. 5% RELAXATION SC ENGLISH CANDIDATES IN SALEM DISTRICT

      S.NO REG WEIGHTAGE
      1 13TE31207576 59.33
      2 13TE31202222 63.53
      3 13TE31201932 57.96
      4 13TE31212732 60.11
      5 13TE31211366 60.66
      6 13TE31208138 56.89
      7 13TE31204772 58.73
      8 13TE31207112 61.32
      9 13TE31205905 59.73
      10 13TE31209695 64.4
      11 13TE31215249 56.68
      12 13TE31215886 56.75
      13 13TE31200542 59.15
      14 13TE31206804 61.21
      15 13TE31207365 58.45
      16 13TE31214384 63.52
      17 13TE31201855 62.25
      18 13TE31201951 58.36
      19 13TE31212323 58.5
      20 13TE31203625 63.2
      21 13TE31202142 57.86
      22 13TE31204155 63.3
      23 13TE31205317 63.97
      24 13TE31206247 61.75
      25 13TE31215591 59.54
      26 13TE31214984 55.09
      27 13TE31203886 59.67
      28 13TE31215003 56.63
      29 13TE31212426 58.2
      30 13TE31214871 61.51
      31 13TE31200208 60.47
      32 13TE31205366 62.55
      33 13TE31210209 58
      34 13TE31208322 57.1
      35 13TE31200934 56.08
      36 13TE31201654 54.42
      37 13TE31201976 57.76
      38 13TE31216553 58.01
      39 13TE30202699 58.12
      40 13TE31207720 58.79
      41 13TE31214358 54.83
      42 13TE31203544 59.8
      43 13TE31207274 59.64
      44 13TE31201587 57.03
      45 13TE30202692 56.73
      46 13TE31213342 57.44
      47 13TE31212911 60.96
      48 13TE31206803 55.66
      49 13TE31205637 59.78
      50 13TE31203240 57.46
      51 13TE31209071 59.06
      52 13TE30200731 57.21
      53 13TE31207774 60.39
      S.NO REG WEIGHTAGE
      54 13TE31217182 58.48
      55 13TE31201322 62.8
      56 13TE31215083 54.62
      57 13TE31207161 57.36
      58 13TE31208857 51.75
      59 13TE31203474 55.58
      60 13TE31209051 55.83
      61 13TE31210013 62.07
      62 13TE31207052 62.92
      63 13TE31216986 58.22
      64 13TE31215558 56.41
      65 13TE31207284 61.6
      66 13TE31206038 59.21
      67 13TE31211474 61.74
      68 13TE31203267 60.11
      69 13TE31208501 59.01
      70 13TE30201695 60.03

      Delete
    4. 5% RELAXATION SC ENGLISH CANDIDATES IN NAMAKKAL DISTRICT

      13TE32212446 62.4
      13TE32207218 60.08
      13TE32208725 64.99
      13TE32208382 59.18
      13TE32201210 60.32
      13TE32207295 57.69
      13TE32205824 63.47
      13TE32209867 64.57
      13TE32204412 57.21
      13TE32202905 59.33
      13TE32207907 59.88
      13TE32201062 61.91
      13TE32203597 60.79
      13TE32208066 59.36
      13TE32210933 59.05
      13TE32200012 59.47
      13TE32206817 57.89
      13TE32204540 61.13
      13TE32209065 60.16
      13TE32208833 64.05
      13TE32206466 55.07

      Delete
    5. தி இந்து

      பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

      'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

      பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள்.

      அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழி எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

      ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது. அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

      Delete
  2. Nasama pora TRB yenda enga vayitherichala kotikiringa.....???

    ReplyDelete
  3. இதில் எந்த குழப்பமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாட படிப்பை முடித்த பிறகுதான் அடுத்த பாட வகுப்பிற்கு சேருகிறார்கள். சேருகின்ற தேதியை மட்டுமே இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
    இதில் ஏதோ யாருக்கோ லாபம் உள்ளது.

    ReplyDelete
  4. case podunga appadhan trb consider pannuvanga......

    ReplyDelete
  5. posting podama innum late panna intha karanathai kail edukarangalo?kadavulukae velicham

    ReplyDelete
  6. kadavul manasu vaika pogirar.. sep 100 persent posting..tet paper2 english ellarukumae job kidaika poguthu..

    ReplyDelete
    Replies
    1. bc maths new wetg 66.70 any chance pls tell me sir

      Delete
  7. Pongaya neengalum ungavelaim enthavelaka evlo kashtapadrom athelam unagaleke theriyatha entha velake moota sumakalam ponga pa etha nanbinal sorukidaikath

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. How to calculate vacancy percentage for
    MBC/DNC W
    MBC/DNC W T

    ReplyDelete
  10. chemistry bc 66.72 tamil medium any chance?

    ReplyDelete
  11. வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த BC Candidates please call..9585992264..just for clarification ...

    ReplyDelete
  12. chemistry bc 66.72 tamil medium dob 13/06/1975 any chance for me? please anyone reply me

    ReplyDelete
    Replies
    1. YOU ARE WOMEN WILL BE CHANCE 99%. BUT MEN 50-50......

      Delete
  13. நேற்று ஒரு நீதி இன்று ஒரு நீதி யா? ??

    ReplyDelete
  14. 22/07/2014
    இடைநிலை
    ஆசிரியர்களுக்கான
    வெய்டெஜ் மதிப்பெண்
    அடுத்த வாரம்
    வெளியிடப்படலாம்;
    டி.ஆர்.பி
    தாள் 2 க்கான வெய்டெஜ்
    மதிப்பெண் வெளியிடப்பட்ட
    நிலையில் தாள் 1 க்கான
    அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்
    ?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள்
    மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1
    க்கான வெய்டெஜ் மதிப்பெண்
    கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ
    முடிவடைந்துவிட்ட நிலையில்
    அரசு தரப்பிடம்
    இருந்து காலிப்பணியிடம் குறித்தோ,
    வெய்டெஜ் மதிப்பெண்
    வெளியீடு குறித்தோ எவ்வித
    தகவலும் இல்லை என
    டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.
    எனினும்
    பட்டதாரி ஆசிரியர்களுக்கான
    இறுதிப்பட்டியல் வெளிவரும்
    முன்னர் இதற்க்கான
    அறிவிப்பு வெளியிடப்படும்.
    என்வே அடுத்த வார இறுதியில்
    தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண்
    வெளியிடப்படும் என
    எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  15. july mudiya pogudhu innum paper 1 pathi endha newsum illa. epo than posting poduvanga....?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி