கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்.


அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2012 - 13ல், சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த போது, '
சென்னையில், கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் டி.பி.ஐ., வளாகத்தில், அனைத்து கல்வி அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, அறிவு சார் பூங்கா கட்டடம் கட்டப்படும்'என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, 'டி.பி.ஐ., வளாகத்தில், தொன்மையான கட்டடங்களை தவிர, இதர கட்டடங்களைஇடித்துவிட்டு, அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவித்து, இரு ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இன்று வரை, எந்த அறிவிப்பையும், தமிழக அரசு வெளியிடவில்லை. இதேபோல், தேர்வுத் துறைக்காக, 2 கோடி ரூபாய் செலவில், ஆவண காப்பக கட்டடம்கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தேர்வுத் துறைக்கு, பாதுகாப்பான, போதிய கட்டட வசதி இல்லாத நிலையில், புதிய அறிவிப்பு நிறைவேற்றப்படும் என, தேர்வுத் துறை எதிர்பார்த்தது. ஆனால், இத்திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி