வரலாறு: ஏழைக்கேற்ற எலுமிச்சை! - விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

வரலாறு: ஏழைக்கேற்ற எலுமிச்சை! - விகடன்

ஆளுயர மாலை... பொன்னாடை... என்று தங்களின் தலைவருக்கு அணிவித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே... ஒரேயரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து குஷியூட்டும் தொண்டர்களும் உண்டு.

பொன்னாடை எங்கே... எலுமிச்சை எங்கே... என்று யாரும் எள்ளி நகையாடுவதில்லை. சொல்லப்போனால், பொன்னாடையைக் காட்டிலும் எலுமிச்சைக்குதான் கூடுதல் மரியாதை.

எலுமிச்சைக்கு இப்படியரு மரியாதை கிடைக்க பல காரணங்கள் இருக்கலாம்... ஆனால், உண்மையிலேயே ஏகப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட பரிபூரணமான ஒரு பழம்தான் எலுமிச்சை. மிகச் சிறந்த கிருமி நாசினி... தாகத்தைத் தீர்ப்பதில் நிகரில்லாதது... ஊறுகாயின் அரசன்... என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எலுமிச்சையின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா! சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தோனேஷிய மக்களால் பயன் படுத்தப்பட்டு... அங்கிருந்து அரேபிய நாடுகளை சென்றடைந்து, மெள்ள ஐரோப்பாவை எட்டிப் பார்த்திருக்கிறது. 1490-ம் ஆண்டுகளில் புதிய நாடுகளுக்கு கடல்வழி கண்டுபிடிக்கும் நோக்கோடு கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்தான் எலுமிச்சையை ‘உலக மயம்’ ஆக்கிவிட்டது! தான் கையோடு எடுத்துச் சென்ற எலுமிச்சையை மேற்கிந்திய தீவுகளில் கொலம்பஸ் பதியம்போட, அதன்பிறகு பல நாடுகளுக்கும் அது பரவிவிட்டது!

ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்டது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று இன்றைக்கும் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அப்படியரு பெருமை கிடைக்க காரணமாக இருந்த விஷயங்களில் எலுமிச்சைக்கு மிகமிக முக்கியமான பங்கு உண்டு என்றால்... அது அதிசயிக்க வைக்கும் செய்திதானே!

பல நாடுகள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் மண்டியிடக் காரணமாக இருந்தது அந்நாட்டின் கடற்படைதான். எதிரிகளால் வெல்ல முடியாத அந்தக் கடற்படை, ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து போனது. அதன் மாலுமிகளை 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்கர்வி எனும் நோய் கொடூரமாகத் தாக்கியது. போரில் எதிரிகளால் வீழ்ந்த வீரர்களின் எண்ணிக்கையைவிட, இந்த நோய் தாக்கி இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகம். ‘எதிரிகளை விட மிகக்கொடியது’ என்று பிரிட்டிஷ் வரலாற்றில் வர்ணிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு விளைவுகள் மிக மோசமானதாக இருந்திருக்கின்றன.

'இந்த நோய் வைட்டமின்- சி குறைபாடினால் ஏற்படுகிறது. இதற்கு மருந்தாக எலுமிச்சைச் சாற்றை உட்கொள்ள வேண்டும்' என்று ஸ்காட் லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் லிண்ட் என்ற மருத்துவர் கண்டுபிடித்துச் சொன்ன பிறகு, எலுமிச்சையை நோக்கி படையெடுத்து, ஸ்கர்வியிலிருந்து தப்பியிருக்கிறது பிரிட்டீஷ் கடற்படை. 1795 முதல் 1815-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் சுமார் 1.6 மில்லியன் காலன் எலுமிச்சைச் சாறு கடற்படையினருக்கு உணவாக கொடுக்கப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

மாமிச உணவில் இருக்கும் ஒருவித வாசனையை போக்குவதற்காகவும், உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும் மட்டுமே ஆரம்ப காலங்களில் சீனா மற்றும் அரேபிய மக்களால் எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டீஷ் கடற்படையின் நோய் தீர்த்த ஒரே காரணத்தால், இதன் மருத்துவ குணம் உலகப் புகழ்பெற்றுவிட்டது.

டயேரியா, மலேரியா, காசநோய் போன்ற வியாதிகள் மற்றும் பல் சம்பந்தமான வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது எலுமிச்சை. இப்போது, 'எய்ட்ஸ்' தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் எலுமிச்சையிலும் தொடர்கின்றன.

தினமும் எலுமிச்சை பழச்சாறு உட்கொண்டு வந்தால் உடலில் உப்பு சத்து சீராகவும், தேவையில்லாமல் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட உப்புச்சத்துக்களை கழுவி... வியர்வை மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ வெளியேற்றும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்புகளுக்கு சத்து அதிகமாக கிடைப்பதுடன் வளர்ச்சியும் வேகமாக இருக்கும் என்பது மருத்துவ அறிவுரை.


இந்தோனேஷியாவில் பிறந்த எலுமிச்சை... இன்று உலகளவில் அதிகமாக உற்பத்தியாவது மெக்ஸிகோ நாட்டில்தான். இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

எலுமிச்சையை உணவு மற்றும் மருத்துவத்துக்கு என்று மட்டுமல்லாமல், உலகின் அனைத்து பகுதி மக்களும் மதம் சார்ந்த சடங்குகளுக்கும் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்பது... 'உலகம் உருண்டை' என்பதை நிரூபிக்கிறது!

28 comments:

  1. Mr.vijaykumar zoo sc 90 above candidate list iruntha sollung sir i am waiting for u r repley...,

    ReplyDelete
  2. இது போல பயனுள்ள செய்திகளை வெளியிடவும், வதந்தி போல் உள்ள அரைகுறை செய்தியை இட்டு எங்களை புன்படுதவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..

      Delete
    2. mariJuly 26, 2014 at 11:16 PM
      E Jagannathan, sir pls apdi solathenka sri ivlo kasta patu thakaval kodukaru, sila thakaval mistakea irukalam, but sri mela mistajf kidayathu, therinja thakavla namaku share panraru athuvae peria visayam, namaku positiva irukra thagavaluku avaruku thanks solrathum, negativea irukra thagavaluku avaru manasa kasta paduthrathum oru nalla teacheroda habit kidayathu, pls yethum thapa soliruntha very sorry

      Delete
    3. Neengal sonnathu 100% correct
      sir

      Delete
  3. Sri sir 1 dout, intha lemona, cm, minister, trb ku kodukanum, apdiyathu avankaluku yanam varumanu
    pakanum sir,

    ReplyDelete
  4. I SPOKE WITH BRT ASSOCIATION LEADER IN CONNECTION WITH STAY MATTER.

    MADURAI COURT ISSUED ONLY NOTICE TO GOVERNMENT. NO GIVEN STAY FOR TET SELECTION PROCESS. DON`T WORRY FRIENDS.

    COMING WEDNESDAY G.O. 71 CASES ARE COMING BEFORE SINGLE COURT JUDGE AT CHENNAI HIGH COURT.

    ReplyDelete
  5. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.

    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.1205,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் திண்டுக்கல் மாவட்டத்தலைவர் அ.சுதாகர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விரிவான தகவலுக்கு நன்றி சார்.
      நான் நேற்று வளமைய பட்டதாரிகள் சார்பான வழக்கு பற்றிய தகவலை பதிவிட்டதற்கு முக்கிய காரணம் அது இடைகால தடை என்பது தெளிவாக உள்ளது என்பதாலும் . "" மிக முக்கியமாக இவ்வளவு நாட்களுக்கு பிறகு தடை உத்தரவு வருகிறது"" என்றால் உறுதியாக பணிநியமனம் செய்யப்போகிறார்கள் என்பதற்காக மட்டும் தான் . மற்றபடி மற்றவர்களை கவலை கொள்ள செய்யவேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை.

      இந்த தகவலை அனேக நண்பர்கள் முகநூலில் வெள்ளிகிழமை அன்றே பார்த்திருப்பீர்கள் நானும் பார்த்தேன் ஆனால் இது உண்மையா என்று சில BRTE ஆகா இருக்கு நண்பர்களிடம் கேட்டு நேற்று உண்மைதான் என்று தெரிந்து கொண்டு ஒரு நாள் முடிந்து தான் பதிவிட்டேன். ஆனாலும் இது பலருக்கு மன வருத்தத்தை கொடுத்து நிம்மதியை கெடுத்துவிட்டது. அதற்காக நேற்றே மன்னிப்பு கேட்டுவிட்டேன் இப்போதும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போதும் ஒன்று உறுதி தடை கிடைத்துள்ளதென்றால் நியமனம் உறுதியாக கூடிய விரைவில் உள்ளது.
      நன்றி.

      Delete
    2. Sri sir pls mudinthu poonathai patri pesa vendaam

      Delete
    3. இவ்வளவு தெளிவான பொறுமையான பதிவுகளுக்கு நன்றிகள் பல மேற்கண்டவர்களே....

      Delete
    4. Only when there is an issue we will get clarity.. Yesterday there was a issue and today there is full calarity.... Sir only for u, Rajalingam , Vijayakumar Chennai --- U all have done a great job..... your active participation in Kalviseithi has has this blog a great success.... Keep it up...

      Delete
  6. E Jagannathan, sir pls apdi solathenka sri ivlo kasta patu thakaval kodukaru, sila thakaval mistakea irukalam, but sri mela mistajf kidayathu, therinja thakavla namaku share panraru athuvae peria visayam, namaku positiva irukra thagavaluku avaruku thanks solrathum, negativea irukrathagavaluku avaru manasa kasta paduthrathum oru nalla teacheroda habit kidayathu, pls yethum thapa soliruntha very sorry

    ReplyDelete
  7. sri Nanparae unkal pani thodara valthukal, nanpa , akaLvarai thankum nilam pola thamai , ikalvar poruthal thalai,

    ReplyDelete
  8. paper 1 938 posting-
    மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா.
    இரண்டுக்கும் தொடர்பிருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இருக்கும்

      Delete
    2. 21 இடங்கள் போதாது மனு..கோரிக்கை..போரட்டம்,.இறுதியா கேஸ் போடலாம்.

      Delete
    3. frnds paper 1 ku 938 posting ok............. mbc ku evlo posting varum pl tell frnds?

      Delete
  9. MY OPINION IN BRTE IS GOVT MAY SAY WE ARE FILLING 2013 VACANCY FOR WHICH BRTES WERE PROMOTED,AFTER GETTING 2014 CASE WE WILL CONSIDER REMAINING

    OUT OF BRTE MAJORITY ARE SCIENCE AND MATHS ONLY !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. ATTENTION AMMA!!

    WE (tntet 2013) ARE ALSO "mana nalam bathikka pattavargal ".

    Amma We want rehabilitation.

    Please announce sweet news by 110 vithi !!

    ReplyDelete
  11. Tntet 2013 are also "mentally affected persons". What is the special scheme for us through 110.

    ReplyDelete
  12. TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
    வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

    தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.

    தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.

    இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  13. நண்பர் சிவகார்த்திக் 26/7/2014 6.47 pm அவர்களுக்கு தங்களுடைய பதிவினை பார்த்தேன் சிறிது வருத்தம் பெருத்த மகிழ்ச்சி.....எங்கள் சகோதரன் ஒருவன் ஐவரையும் தூற்றிகிறானே என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி....
    தாங்கள் செய்தி பகிர்ந்து எத்தனை நாளாக இருக்கும்.....எங்கள் ஐவரின் கட்டுரையெ படித்து விட்டு சொல்லவேன்டும்.....
    இந்த TET க்காக நாங்கள் எடுத்த முயற்சிக்கு தாங்கள் அளிக்கும் பரிசு இதுதானா?????
    உன்மையெ உலகிற்கு உரக்க சொல்லுபர்கள் நாங்கள்....என் பேனாவும் எழுதும் அனைவரின் கண்ணீர் செந்நீர் துடைக்க... யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறக்க வேண்டாம் சிவகார்த்திக் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. siva karthikJuly 26, 2014 at 10:45 PM
      கல்வி செய்தியில் ராஜலிங்கம். ஶ்ரீ.மணியரசன் . பவி. ஜெயப்பிரியா போன்றோருக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பொய்யான. தவறான தேவையற்ற செய்தி பரப்ப வேண்டாம் உண்மை தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள் நீங்கள் உங்கள் பெயர் பிரபலமாக ஏது வேண்டும் என்றாலும் பதிய வேண்டாம். எனக்கு தெரிந்த செய்தி English க்கு BC க்கு 63 வரை வருமாம். மற்ற வகுப்புகளுக்கு தலா 1&2 மதிப்பெண் குறையும் ஆகவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எந்த செய்தியும் உண்மை அல்ல அரசு வெளியிட்டால் மட்டுமே உண்மை அதுவரையில் வரும் செய்தி பொய். இன்று பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது ஶ்ரீ என்பவரின் பொய்யான செய்தி. அவருக்கு ஒரு அன்புடன் வேண்டுகோள் உண்மை செய்தி தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள். தமிழகத்தில் 2 ஆண்டுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் மக்கள் நல பணியாளர். பணியை அம்மா அவர்கள் பரித்தார் எனவே வேலை கிடைக்காது என்று அப்பாவி மக்கள் 150 பேர் தற்கொலை செய்த துயரம் இன்றும் மறைவதில்லை தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளன என இன்று கல்வி செய்தி யில் செய்தி வந்துள்ளது அப்படி நிலை உள்ள தமிழகம். ஒரு செய்தி பரப்புவது பெரிய விஷயம் இல்லை உண்மையானதை மட்டுமே கூற வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேண்டும் நாம் அனைவரும் வருங்கால மாமனிதரை உருவாக்க உள்ள பொறுப்பான ஆசிரியர். நீங்கள் கூறும் செய்த பால்வாடி பிள்ளை போல un mature ஆக செய்தி பரப்பி வருகிறீர்கள் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் எனவே உங்கள் பெயர் பிரபலமாக எவ்வளவோ வழி உள்ளன தவறான செய்தி பரப்ப வேண்டாம் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நான் தவறாய் பேசி இருந்தால் மன்னிக்கவும்

      Sivakarthik ungaloda karuththukku nantri......
      Ungalathu karuththil entha mariyathaium theriya villaiyee......
      Ungalai mika vanmaiyaaka kandikkireen......
      Nangal peer vaanga kaddurai eluthurooma????
      Nangal yaar engalin nilai, suyaviparam therinthu pesavum....

      Delete
  14. sri sir avarkalai kurai solla evarukum thaguthi ellai..ithu varai sri sir pala nuru nalla seithikalai namaku thanthuullar..ninaithu parthu paesunga..palasa marakakudathu..siriya thavarana seithi avar ariyamal seithu irunthal pernthanmaiyodu manika kattrukolungal..arumai nanbarkalae...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.. ஆனால் இது வருத்தத்தை கொடுக்க கூடிய செய்தியே தவிர தவறான பொய்யான செய்தியில்லை உண்மை செய்திதான்...

      ஆதாரம் நண்பர் விஜயகுமார் அவர்களின் 11.11 பதிவில் உள்ளது.

      Delete
  15. sivvakarthik sir chem bccut of evlo sir please kidaikathu antrL adutha exam kkavathu padikkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி