அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தினமலர்

"தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, தகவல் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ள, அரசு தயாராக உள்ளது,” என, துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர், மேலவையில் தெரிவித்தார்.
மேலவையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா (பா.ஜ.,) கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறியதாவது: அதிகளவில் கட்டணம் செலுத்தும் பெற்றோர், கல்வி நிர்வாகத்திடம் இருந்து, எந்த ஆவணங்களையும் பெற்று கொள்ளவதில்லை. ஆகவே, அரசு, குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க, சாத்தியமாவதில்லை. தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, தகவல் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ள, அரசு தயாராக உள்ளது அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி,

கல்லூரிகள் மீது, அரசு, சுயமாக நடவடிக்கை மேற்கொள்ளும். மாவட்ட அளவில் கலெக்டர்களும், தாலுகா அளவில், டி.டி.பி.ஐ., அதிகாரிகளும், அதிக கட்டணம் வசூலிக்கும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் இடம் உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி