கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்பு




தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் புதன்கிழமை (ஜூலை 30) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். தவிர, 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

இது தொடர்பாக, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இங்கு சாட்சிகள் விசாரணை 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22 மாதங்கள் நடைபெற்று வந்தன. விசாரணை ஜூலை 17-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

1 comment:

  1. 94 பிஞ்சுகள் கருக் காரணமாக இருந்த கயவர்கள் உரிய தண்டனை பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி