தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு.


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாக வில்லை என்றுசட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
வியாழனன்று பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைள் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர் இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:ஆசிரியர் தகுதித் தேர்வில் 38ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 10ஆயிரம் பேரைத்தான் அரசு தேர்வுசெய்ய உள்ளது. அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு பிளஸ் டு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி படிப்பு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தனியார் பள்ளியில் பணிபுரிந்திருந்தால் அந்த அனுபவம், ராணுவ வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றோர் என்ற சமூக பார்வையில் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படி செய்தால்தான் அது உண்மையான தேர்வாக இருக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

2 comments:

  1. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
  2. பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி படிப்பு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது enpathu pala bharathikku theriyavillaiya ,,, athumathum ennavam ....... kanna kaluvitu paru pa ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி