பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையிலும், மாணவர்களின் விபரங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, கடந்த ஆண்டு, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களின் விபரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. மாணவரின் பெயர், தந்தை, தாய் பெயர், ஆண்டு வருமானம், ஜாதி, மொழி, மதம், முகவரி, உடன் பிறந்தவர்கள், ரத்தவகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டு ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களில், கிராம அளவில் உள்ள, ஒரு சில தொடக்க பள்ளிகள், ரத்தவகை குறிப்பிடாமல் வழங்கியிருந்தது. தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்விக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ரத்தவகை சேகரிக்காத பள்ளிகள், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பள்ளிகளில், ரத்தவகை முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரத்தவகை கண்டறியும் முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டிருப்பதன் மூலம், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி