ஆசிரியர் இயக்கத்தின் தோற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

ஆசிரியர் இயக்கத்தின் தோற்றம்

(பதிவு-1)

சென்னை இராஜதானியல் தான் நம் அமைப்பு தோன்றியது..

மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்படாத சென்னை இராஜதானியில்  25 மாநிலங்கள் இருந்தன..

கேரளத்தில் மலபார், கர்நாடகத்தில் மங்களூர், ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே சென்னை இராஜதானி..

தொடக்கக் காலங்களில் சுமார் 1937 க்கு முன் தாலுக்கா அளவிலும், மாவட்ட அளவிலும் ஆங்காங்கே சிறு சிறு அமைப்புகளாக நாடெங்கிலும் ஆசிரிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தன..

தாலுக்கா போர்டுகள் அமைக்கப்பட்ட போது தாலுக்கா போர்டு சங்கங்கள் இருந்தன..
அப்போது தான் அனைத்து ஆசிரியர்களுக்குமான தென்னிந்திய ஆசிரியர் சங்கம்
( SITU ) தோன்றி, வளர்ச்சிபெற்று இயங்கிவந்தது..

இவ்வியக்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம உரிமையோ , தகுதியோ எப்பொழுதும் வழங்கப்படவில்லை..
கோரிக்கைகளும் முதன்மைப் படுத்தப்படவில்லை..
சங்க நிர்வாகப் பொறுப்புகளிலும் நிறைவான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற உணர்வினால் இந்த அமைப்பு சிதைந்தது..

1946-ல் பெல்லாரியில் நடைபெற்ற தென்னிந்திய ஆசிரியர் மாநாட்டில் இந்த வேறுபாடுகள் கூர்மையாயின..
மாநாட்டில் ஒதுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரிய சமுதாயத்தின் விடிவெள்ளியாக தோன்றிய உயர் திரு. வா. இராமுண்ணி அவர்கள் சென்னை ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் என்ற இயக்கத்தை, கல்லூரி பேராசிரியர் திரு.இ.என்.கோவிந்தராசு தலைமையில் அம்மாநாட்டுப் பந்தலிலேயே தோற்றுவித்தார்..
  
           -இயக்க வரலாறு தொடரும்..

1 comment:

  1. Asiriyar Kural
    கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை


    அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கல்வியில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட்டு எல்காட் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    அனைத்து பள்ளிகளிலும் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்ட பின் சிறப்பு தேர்வு வைத்து ஏற்கனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறாமல், விலக்கு அளித்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

    இதனால் பாதிக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளுக்கு சப்ஸ்டிட்யூட் முறையில் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடந்த ஆண்டே மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர்.

    கல்வியாண்டு துவங்கிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனத்துக்கான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது. அதுவும் பல பள்ளிகளில் இல்லாததால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் தடுமாற வேண்டியுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் உயர்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், கல்வித்துறை சார்பில் கடிதம், விவரம் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. இதனால் உயர்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி