'1.90 லட்சம் பதவிகள் காலி' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

'1.90 லட்சம் பதவிகள் காலி'


பெங்களூரு : "மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக உள்ளன. ஆனால், இதில்,அவசியமான பதவிகள் மட்டுமே நிரப்பப்படும்,” என, முதல்வர் சித்தராமய்யா, மேலவையில்தெரிவித்தார்.
மேலவையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., - எம்.எல்.சி.,இ.கிருஷ்ணப்பா கேள்விக்குபதிலளித்து, முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது:

கல்வி, சுகாதார, போலீஸ் துறைகளில், காலியாக உள்ள பதவிகளை நிரப்பும்படி உத்தவிடப்பட்டுள்ளது. 16,600 ஆசிரியர்கள் நியமனத்துக்கும், 9,000 போலீஸ் பதவிகள் நியமனத்துக்கும் உத்தரவு வெளியிடப்படுகிறது. முந்தைய அரசுகள், காலாகாலத்தில், காலியான இடங்களை நிரப்பாததால், இந்தளவிலான இடங்கள், காலியாகவே உள்ளன. எதிர்வரும் நாட்களில், அவசியமான பதவிகள் நிரப்பப்படும். விவசாய துறை, மாற்றி அமைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், 7,000 பதவிகள் ரத்தாகின. மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக உள்ளன. பெரும்பாலான துறைகளில், தேவையில்லாத பதவிகள் இருப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அவசியமான இடங்களை மட்டும் நிரப்ப, அரசு முன்வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி