அரசு பணியில் சேர்ந்தால் கோப்புகளை பார்க்க தமிழ் கட்டாயம் படித்திருக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

அரசு பணியில் சேர்ந்தால் கோப்புகளை பார்க்க தமிழ் கட்டாயம் படித்திருக்க வேண்டும்


உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியகோரிக்கை மீதானவிவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத்(ஓசூர்) சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனது தொகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 850 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே உள்ள பாடப்பிரிவுகளுடன் கூடுதலாக பி.காம், பிபிஏ ஆகிய பிரிவுகளை தொடங்கவேண்டும். தெலுங்கு, கன்னடம், உருதுமொழி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: உறுப்பினரின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப் பட்டு, முதல்வரின் ஆலோசனையுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை மொழி பேராசி ரியர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்றால், கவுரவபேராசிரியர்களை நியமிக்கவேண்டியதாகவரும். கோபிநாத்: இந்த கல்லூரியில் ஆண்கள் மற்றம் பெண்களுக்கான விடுதிகள் சொந்தக் கட்டிடத்தில் கட்டி கொடுக்கவேண்டும். தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு கட்டாய தமிழ் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழ் ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கவில்லை. பல இடங்களில் தெலுங்கு ஆசிரியர்கள் தமிழ் மொழி பாடங்களை கற்றுக்கொடுக்கும் நிலை உள்ளது.

அமைச்சர் வீரமணி: உறுப்பினர் சொல்லுவதுபோன்ற நிலை இப்போது இல்லை. பெரும்பான்மையான பள்ளிகள் அனைத்தி லும் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. மீதமுள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் படித்தால்தான் அரசு வேலைக்கு வரும்போது, அரசு கோப்புகள் அனைத்தையும் படித்து புரிந்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ் பேசும் பொதுமக்களிடம் உரிய பதில் அளிக்க முடியும்.

கோபிநாத்: கடந்த எட்டுஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் இல்லாமல் படித்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் எப்படி தமிழ் இலக்கணங்களை எப்படி படிப்பார்கள். ஒரு குழு அமைத்து உண்மை தகவலை ஆராய் ந்து அறிக்கை வெளியிடவேண்டும்.

அமைச்சர் பன்னீர் செல்வம்: தமிழகத்தில் சிறுபான்மையினரும், முதல் நிலையான தமிழ்பாடத்தில் 100 மதிப்பெண், 2ம் நிலையான ஆங்கிலப்பாடத்தில் 100 மதிப்பெண், 3ம் நிலையான அறிவியல், கணிதம், வரலாறு ஆகிய 3 பாடங்களில் தலா 100 மதிப்பெண் எடுத்தால் போதும். 4ம் நிலையான அவரவர் தாய்மொழியில் படிக்கும் பாடத்திற்கு மதிப்பெண் உண்டு என்றாலும், அது தேர்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதனால் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை படிக்க தடையில்லை. இரு மொழி கொள்கை என்பது தமிழகத்தின் முடிவு. எந்தமொழி பேசுபவரையும் புண்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை.

கோபிநாத்: இப்பிரச்னையை நான் அரசியலாக்க விரும்பவில்லை.இருப்பினும் இது தொடர்பாக பேசுவது அவசியம் என்பதால் பேசுகிறறேன். தேர்வுகளில் சிறுபான்மை மொழிக்கென்று 50 மார்க், தமிழுக்கு 50 மார்க் என்று பிரித்து கொள்ளலாம்.

அமைச்சர் வீரமணி: கடந்த திமுக ஆட்சி காங்கிரஸ் தயவில்தான் இருந்தது. அப்போது இதபற்றி ஏன் பேசவில்லை. நாங்கள் இப்பிரசனையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் வாழ்பவர்கள் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: நாங்கள் இப்பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை. நீங்கள் கூறிய கருத்துகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். அவர் இதுதொடர்பான முடிவு எடுப்பார்.

அமைச்சர் வீரமணி: கட்டாய தமிழ்கல்வியை 5 ஆயிரத்து 166 பேர் மட்டுமே தற்போது படிக்காமல் உள்ளனர். மற்றவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி