காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்


காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம் வென்றார்; குடும்பத்தினர் மகிழ்ச்சி - தினத்தந்தி


வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


சதீஷ்குமார் தந்தை சிவலிங்கம்(48) முன்னாள் ராணுவவீரர். தாய் தெய்வானை(42) பிரதீப்குமார் என்ற சகோதரர் உள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் 1985 முதல் 2001 வரை ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அவரும் பளுதூக்கும் வீரர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ராணுவத்தின் சார்பில் பங்கேற்ற சிவலிங்கம் ஜெபல்பூரில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார். பின்னர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார். தந்தை சிவலிங்கத்தை ரோல்மாடலாக ஏற்று தானும் ஒரு பளுதூக்கும் வீரராக வரவேண்டும் என்பதில் சதீஷ்குமார் உறுதியாக இருந்தார்.

சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு (மாநகராட்சி) உயர்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார். அப்போது பளுதூக்குவதில் திறமையாக செயல்பட்டுள்ளார். அவரது திறமையை கண்டு வியந்த உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ்குமாரை வேலூர் சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சி கூடத்தில் சேர்த்தனர். அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அதன் பின்னர் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல்ஹக்கீம் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தார். படித்து கொண்டே பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். அவரின் திறமையின் மூலம் 3–ம் ஆண்டு பட்டபடிப்பை படித்த போது தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்தது. தொடர்ந்து தென்னக ரெயில்வே அணி வீரராக களத்தில் இறங்கினார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. 2010–ம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011–ம் ஆண்டு தென்கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012ம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013–ம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சதீஷ்குமார் நேற்று காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். சதீஷ்குமார் 149 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக வருகிற அக்டோபர் மாதம் தென்கொரியாவில் நடைபெற உள்ள பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கிறார். சதீஷ்குமார் வென்ற பதக்கங்கள் வெற்றி பெற்ற போட்டிகள் எங்களால் கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளது. அவரின் 8 ஆண்டு கடும் பயிற்சியால் வெற்றி கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியிலும் சதீஷ்குமார் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அவரின் பெற்றோர் நம்பிக்கையுடன் மகிழ்ச்சி ததும்ப கூறினர்.

22 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மேலும் வெல்க

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சிறந்த வீரரை உருவாக்கிய சி.அப்துல்ஹக்கீம் கல்லூரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. I m hapy to say i c thz event in live. Nit 2pm ku i c tht i tv
    On his frst attempt he done we'll

    On his frst attempt he achieve the top place
    then he got gold
    Wow
    wht a event
    chanceles

    ReplyDelete
  6. சும்மா கல்விச்செய்தியை பார்த்துக்கொண்டிருக்காமல் போய்படிங்க. இத பார்த்தீங்கனா மன நிம்மதி போய்டும். .. இது ஒருவிதமான போதை மாதிரி.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. madom first neenga update pannathinka ok

    ReplyDelete
  9. Saravanan sir pls give me your cell no.
    (venkatuk8593@gmail.com).

    ReplyDelete
  10. தமிழகத்தில் பிறக்க வைத்தாய் என்னை லூசு ஆக்கிவிட்டாய் கீழ்பாக்கத்தில் சேர்த்துவிட்டாய் புலம்பவும் வைத்துவிட்டாய் இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் இறைவா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  11. தமிழகத்தில் பிறக்க வைத்தாய் என்னை லூசு ஆக்கிவிட்டாய் கீழ்பாக்கத்தில் சேர்த்துவிட்டாய் புலம்பவும் வைத்துவிட்டாய் இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் இறைவா

    ReplyDelete
  12. Kalaiselvan sir
    Trb Ku poneengala
    Meeting pathi theriyuma
    Please update the news

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. GOD BLESS U Mr.SATHEESH COMMONWEALTH GOLDMEDALIST. THE WOMB WHICH U WAS LYING IS A BLESSED ONE IN THE WORLD BY GOD.

    ReplyDelete
  15. WOW! வாழ்த்துக்கள்....,
    சிறந்த வீரரை உருவாக்கிய சி.அப்துல்ஹக்கீம் கல்லூரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....................,

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள். புலிக்கு பிறந்த்தது பூனையாகுமா??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி