அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்


கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, காலி பணியிடங்கள், பள்ளியின் பெயர், முகவரி, பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என, 28 வகையான விவரங்களை சேகரிக்க சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற விவரங்கள் சேரிக்கப்படுவது வழக்கம். சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில், தலைமை ஆசிரியர் மற்றும் பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, காலி பணியிடங்கள், பள்ளியின் பெயர், முகவரி, பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என, 28 வகையான விவரங்களை சேகரிக்க சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற விவரங்கள் சேரிக்கப்படுவது வழக்கம். சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில், தலைமை ஆசிரியர் மற்றும் பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

1 comment:

  1. daily trb collect pannu vanga?????????????? ana posting poda mattanga enga kastathaum purinthu kollamattanga?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி