தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்.


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில்"ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப்பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில்பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய/ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

4 comments:

  1. Awesome information..!
    Thank u kalvisethi..!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மீது தொடரப்பட்ட வழக்குகளில்300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்குபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம்10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர

    ReplyDelete
  4. Tamil nadu teachersku therindha our seithi yadhenil trb Mel irundha anaithu vazakkukalum needhiyarasar dismissed seithathagavum arasin pakkam neethi kidaithuvittadhu end rum andha theerpu nagalkal viraivagaperappatta vudan appointment podappadum endru pirabala pathirikkaikalilum satta sabaiyilum therivikkappattadhu my dear nanba appadi irukka nee ennaya pudhu kadha solra year pannandu manikku trb offica parthadhu please anyone can reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி