முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.?


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனி
மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் முன்னிலையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துக்குமாரி பேசினார்.பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் மாநில அளவில் காலிப்பணியிடங்கள் காட்டாமல் மறைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கலந்தாய்வு நாள் அன்று அனைத்து ஆசிரியர்களும் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை கண்டித்து ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழி மூலம் நடத்தாமல், பழைய முறையிலேயே நடத்த வேண்டும்.2004ல் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

  1. Dear friends,
    Who are all passed in 2012 tet exam with the major of Economics. If it is possible to get posting. Give me some ideas. How to appeal this. Post your comment here. Mention your contact number also. Because i also cleared this exam. But on my certificate verification they told me this major not eligible for this exam. But they are not mentioned for that notification about. this. So please organised. That candidates.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி