'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


இது தொடர்பாக, மத்திய திட்ட கமிஷன் மற்றும் ஆதார் அடையாள அட்டை வழங்கும்ஆணையத்தின் அதிகாரிகள் குழு, நாடு முழுவதும், 300 மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.ஆதார் அடையாள அட்டையை, மானியம் வழங்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தவும்,மத்திய அரசு முடிவு செய்தது. அதிக புகார்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சமையல், 'காஸ்' ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானிய தொகைகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், தவறான நபர்களின் கைகளுக்கு இந்த மானியம் சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து, மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்த திட்டங்களுக்கான மானிய தொகையை, ஆதார் அட்டை உதவியுடன், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாகசெலுத்தும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி