கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில்சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் சி.பிரீத்தி,எல்.கார்த்திகேயன், வி.கே.வருண் ஆகியமூன்று பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முறையே முதல்மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறஉள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்www.tanuvas.ac.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.),பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித்தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.எவ்வளவு இடங்கள்: ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல்படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்தவரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல்(80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள்உள்ளன.

இதில் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ளகல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்)படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஒசூரில் உள்ளகல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்)படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி