துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2014

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி


தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம்ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பொருட்டு, துவக்கப் பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிப் பாடத்திட்டத்தில், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்தும்வகையிலான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி