ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர்

ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மெட்ரிக்., பள்ளிகளின் மோகத்தால், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை சரி செய்ய, கடந்த 2012--13 ம் கல்வியாண்டில், அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கென, தனி ஆசிரியர்களோ, வகுப்பறைகளோ ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் வழிக்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றப்பட்டனர். பல தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை பெயரளவில் மட்டுமே கசெய்திஉள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆங்கில வழி கல்வி உள்ள பள்ளிகளின் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தை, சேகரித்து வரும் ஜூலை 22 க்குள், மாநில தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, அனுப்ப, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


7 comments:

  1. Itherkena thani aasiriyar pani idangal nirappa padum ena enakku thonrukirathu.......

    ReplyDelete
    Replies
    1. சதாசிவம் சார் கண்டிப்பாக இதற்கான தனி இடம் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இல்லை ஏனெனில் ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்கள் மிக மிக குறைவு எனவேதான் அந்த பள்ளிக்கு உரிய ஆசிரியரே ஆங்கிலவழி கல்வியை. போதிக்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.

      Delete
  2. In Elementary Education -for STD 1 & 6 ENGLISH MEDIUM introduced first from last yr.

    NOW ALL GOVT PRIMARY SCHLS ANNOUNCED AS ENG MEDIUM.

    SO, Govt planned to appoint one ENGLISH BT in STD 1 in all primary schls. (Converting the Second grade post of standard 1 to English BT.)

    So, ENGLISH BT PAPER 2 posts wil b highly increased & appointed in this tet.

    ReplyDelete
    Replies
    1. case poda oru matter kidaichuduchu second grade padichavangala seendadheenkappa

      Delete
  3. no chance that vacancies are appointed by the second grade teachers only

    ReplyDelete
    Replies
    1. minister veeramani sollittaruppa kettukonga

      Delete
  4. nangale paper 1ku innum onnum kanomnu pulampittu irukkom ivanga vera beeeeethya kilapuranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி