திருவோணம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து TNPTF-ன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ( 01.08.14 ) மாலை நடக்கவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2014

திருவோணம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து TNPTF-ன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ( 01.08.14 ) மாலை நடக்கவுள்ளது.

பல முறை இயக்கவாதிகள் நேரில் சுட்டிக்காட்டியும், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் கண்டித்தும், தனது போக்கினை எள் முனையளவு கூட அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
மாறாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.


> அதிகார மனோபாவத்துடன் மரியாதை குறைவாக பெண் ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது,

> பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தொலைபேசியை துண்டித்துவிடுவது,

> மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்கும் பெண் ஆசிரியர்களை ஏற இறங்க அடிமையைப் போல் பார்ப்பது

> அரசு நன்னடத்தை விதிகளைப் பின்பற்றாமல் அடாவடித்தனம் செய்யும் ஆசிரியரை கண்டிக்க வேண்டிய அதிகாரியே கையாளாக வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மத்தியில் ஒற்றுமையைக் குலைப்பது ,

> அடிபணியாத ஆசிரியர்களைப் பற்றி ஊர்த் தலைவர்களிடம் ஏடாகூடமாக கோத்துவிட்டும்,  தூண்டிவிட்டும்  வேடிக்கை பார்ப்பது,

> இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படுவது,

> ஆசிரியர்களுக்கு எந்த ஒரு வேலையையும் உடனே முடித்துக்கொடுக்காமல், அதை ஏன் தாமதம் என கேட்கும் இயக்கவாதிகளுடமே 4 முறை அலையவிட்டா உடம்பாவது குறையும் என நகைப்பாக  பதிலளிப்பது .

> தனக்குத் தோதானவர்களுக்கு ஒரு விதி மற்ற ஆசிரிர்களுக்கு ஒரு விதி என பின்பற்றுவது,

> குறைதீர் நாளிலும் அலுவலகம் பூட்டிக்கிடந்த அவலம்,

> 3 மாதங்களாக ஆண்டாய்வு நடத்திய அவலம்,

> தலைமையாசிரியர் கூட்டத்தையே தனது ஆதரவாளர்களைக் கொண்டு  போர்கலமாக மாற்றி அதை பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டிருந்த அவலம்,

இப்படி அவரின் நிர்வாக சீர்கேடுகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.

2 முறை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நேரடி கவனத்திற்கு எடுத்துச்சென்றும்,

23.09.13 -ல் AEEO விடம் கோரிக்கை மனு கொடுத்தும்,

26.12.13-ல் DEEO விடம் புகார் மனு கொடுத்தும்,

04.01.14-ல் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு புகார் மனுவை மின்னஞ்சல் அனுப்பியும் இவரது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..

எனவே இவரது செயல்பாட்டினை நேர்செய்தே தீர்வோம் என்று கொதித்தெழுந்தது இயக்கம்..

நடவடிக்கை எடுக்குமா கல்வித்துறை..?

நம்மவர்களே நம்மை மேற்பார்வை செய்தால் நம் கஷ்ட-நஷ்டங்கள் புரியும் என்றுதான் உதவித்
தொடக்கக்கல்வி அலுவலர் பதவியை நாம் போராடி பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் சில உதவித் தொடக்கக்கல்வி அலவலர்கள் தனக்கு கிரீடம் கிடைத்தது போல் அடக்கு முறை ஆட்சியையும்,
சங்கஙகளுக்கிடையில் சிண்டு முடியிற வேலையையும் கட்சிதமாக செய்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

எவ்வளவோ நல்ல,நேர்மையான அதிகாரிகளுக்கு மத்தியில் , இவரைப் போன்ற ஒரு சிலரால் மொத்த அலுவலர்களுக்குமே கெட்ட பெயர் வந்து விடுகிறது.

எனவே தொடக்கக்கல்வி இயக்குநர் அதிக சிரத்தை எடுத்து அநாகரிக
அதிகாரிகளைகளை கலையெடுக்க வேண்டும்.

விதிக்கு புறம்பாக செயல்படுவது,
விதிகளை சரியாக தெரியாமல் விதண்டாவாதம் செய்வது,

பெண் ஆசிரியர்களை மிரட்டி -உருட்டி தான் ஒரு ஹிட்லர் போல்
நடந்து கொள்வது என்பது கேவலமான செயல் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

தட்டிக்கொடுத்து தக்க
ஆலோசணைகளை வழங்கி கல்வித்துறை முன்னேற
முயற்சி செய்ய வேண்டுமொழிய
அடக்குமுறைகள் கூடாது.

அவ்வாறு செய்யும் அலுவலர்களை நாம் வெளி உலகிற்கு தோழுரித்து காட்டுவோம்.

அடக்குமுறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்..

ஒன்றுபடுவோம்,
போராடுவோம்..


2 comments:

  1. Mr. பொன் சுந்தர் என்கிற ராம் ராம்,

    please come out from pon sundar to ram ram.

    இரவு பணி, தனிமை. சலிப்பா இருக்கிறதா sir?

    யாரையாவது சீண்டி பொழுது போக்கலாம் என்ற நினைப்பில் உருவான பெயர் தான் பொன் சுந்தர்.உண்மைதானே நண்பரே?

    நானும் சில நேரங்களில் என் கடையில் இரவுப் பணி செய்வேன்.அதனால் ஏதேனும் உபயோகமான தலைப்பில் விவாதம் செய்தால் நிச்சயம் பதிலெழுதுவேன்.

    ஆங்கிலத்தில் தவறாக எழுதி என்னை திசை திருப்பலாம் என்பது உங்கள் நினைவாக இருக்கலாம்.ஆனால் என் மூளை அதையும் தாண்டி செயல்படக் கூடியது.

    ஆனால் நீங்கள்தான் பொன் சுந்தர் என்று உறுதி படுத்தியதற்கான காரணத்தைத் தெளிவாக எழுத மாட்டேன்.

    என்ன sir இந்த comment ஐ படிக்கின்ற பொழுது ஒரு புன் முறுவல் வருகிறதா? சிரித்துக் கொள்ளுங்கள். தவறில்லை.

    உங்களோடு எனக்கும்,கல்விசெய்திக்கும் எந்த சிக்கலுமில்லை.அதனால் நீங்கள் ram ram என்ற பெயரிலேயே comment எழுத வரவேற்கப்படுகிறீர்கள்.

    தயவு செய்து இனிமேலும் நான் ராம் ராம் இல்லை என்று சமாளிக்க வேண்டாம்.

    நீங்கள் உங்களை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டால் நான் என்னை அதி புத்திசாலியாக நினைத்துக் கொள்வேன்.

    welcome back to kalviseithi.

    ReplyDelete
  2. தேவராஜன் ஸார் நமக்குள் இருக்கும் வாசுகி AEEO போன்ற கறுப்பு ஆட வாசுகி லஞ்ச முகத்திரையெ கிழிக்க வேண்டும்.....
    அவரைப்பற்றி ஓரளவு விசாரித்து விட்டேன்.... ஒழுக்கமில்லா பெண்னால் அந்த குடியே கெட்டுவிடும் என அறநூல்கள் சொல்லுகிறது......அவர் பெண் அல்ல மண்.....
    வானத்தில் இருந்து திடிரெனெ குதித்து வந்தாரா???
    நேற்று இடைநிலை ஆசிரியராக இருந்து இன்று வந்திருக்கிறார் அவ்வளவுதான்....
    நான் இடைநிலை ஆசிரியர் ஆனால் உங்ககூட களத்தில் குதிப்பவன் நான் தான்...
    ஆர்ப்பாட்டம் சிறக்க வாழ்த்துகிறேன்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி