TNTET-ஜூலை 30:வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

TNTET-ஜூலை 30:வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்.


வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படஉள்ளன.பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

15 comments:

  1. Countdown Starts.... 9 days to go... Be happy frds ..

    ReplyDelete
  2. is that true news? Inga 11000 nu pottu irukaga but amaichar 3460 nu sonnar which is true ?

    ReplyDelete
    Replies
    1. குமார் செய்தியை ஒழுங்காக பாருங்கள்

      Delete
  3. 3460 next year this year 11000

    ReplyDelete
  4. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய குளறுபடி :

    .05 மதிப்பெண்கள் இலவசமா ?

    // அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //

    ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற “ ஆசிரியர் தகுதித் தேர்வில் “ வெற்றி பெற்று அரசுப் பணிக்குக் காத்திருப்பவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது. மேலும் வருகின்ற 30-07-2014 அன்று அரசுப் பணிக்குத் தேர்வாகும் ஆசிரியர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
    தேர்வர்கள் தங்கள் +2, இளங்கலை /இளமறிவியல்(B.A., B.Sc), கல்வியியல் இளைஞர் (B.Ed) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை இரு தசமத்திருத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது அளித்திருந்தனர். தேர்வர்களின் மதிப்பெண் சதவீதத்தை “ வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாக” மாற்ற ஆசிரியம் தேர்வு வாரியம் தவறான முறையை கையாளுகின்றது அல்லது வாரியம் பயன்படுத்திய மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது.

    அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF).

    ஆனால் ஆசிரியம் தேர்வு வாரியம் பயன்படுத்தியுள்ள மென்பொருள் வெயிட்டேய்ஜ் மதிப்பெண்ணைக் கணக்கிடும் பொழுது புள்ளிக்குப் பிறகு ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ வரும்பொழுது ஒரு தசம மதிப்பை தானாகவே கூட்டிக் கொள்கின்றது , இது தவறான நடைமுறையாகும் மேலும் அரசு விதி முறைகளுக்கு எதிரானது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த தவறான நடைமுறை படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ( 13TE63204905)
    +2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.

    .4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .1 தான் ....ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மென்பொருள் தானாகவே ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது.

    .01 வேறுபாட்டில் அரசு ஆசிரியர் பணியை இழக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் நிலையில் .05 மதிப்பெண்களை இலவசமாக வழங்குவது எவ்வகையில் சரி? இம்முறை பெரும்பாலான தேர்வர்களுக்கு எதிராக அமைகின்றது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சரியான வழியில் “வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களைக்” கணக்கிட வேண்டும்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் இதை உடன் கவனத்தில் கொண்டு “வெயிட்டேய்ஜ்” கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது 75,000 தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நிறைமதி.
    ஆசிரியர் , மதுரை.

    ReplyDelete
    Replies
    1. Dont cut and paste the news repitately. Any dought in that calculations go and clarify. TRB calculation is very correct.

      Delete
    2. நிறைமதி சார் உங்கள் செல் நம்பரை சொல்லுங்கள் இதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன் . டி ஆர் பி வெளியிட்டுள்ளது 100 சதவீதம் சரியே

      Delete
  5. தமிழ்நாடு முழுக்க பட்டதாரி ஆசிரியர்களின் (ranking) பட்டியல் அனைவரும் அறியும்படி வெளிப்படையாக pdf-ஆக வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  6. S all selected list pdfla podattum . Vellai arikkai

    ReplyDelete
  7. Maybe weitage system will cancel, TET- II posting based on only TET marks. Wait plz.

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி , வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இன்னும் ஏழு நாட்களே உள்ளன.
    மனம் நிறைய கனவுகளுடன் காத்திருக்கும் உங்களில் ஒருவன்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி