TNTET Article : டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2014

TNTET Article : டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?


டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சில கேள்விகள்:

1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.

2.SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam,அவ்வளவு ஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாக கருதப்படும்IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?

3. டெட் தேர்வில் மட்டும் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? வெயிட்டேஜ் முறையில் எத்தனை முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நிலவி வருகிறது.

4. இரண்டு முறை டெட் தேர்வுகள் நடைபெற்ற பின்பு திடீரென மதிப்பெண் சலுகை வழங்கியதற்காண காரணம் என்ன? சலுகை வழங்குவதாக இருந்தால் 2012 - ல் நடைபெற்ற டெட் தேர்விற்கும் சலுகை வழங்குவதுதானே முறை.

5. 2012 தேர்வு அறிவிக்கும்போதே சரியான வரைமுறை கொடுத்து தேர்வுகள் வைத்திருந்தால் பலரின் வாழ்வு பறிக்கப்படாமல் இருந்திருக்கும், எகா:- 2012 டெட் தேர்வில் 82 மதிப்பெண் முதல் தகுதி என்றால் அந்த ஆண்டு 82,83,84,85,86,87,89 மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள் 18 மாதம் ஊதியம் பெற்று வாழ்வில் மதிக்கதக்க நிலை பெற்று இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மட்டும் பாவம் செய்தவர்களா?

6. 2012 தேர்விற்கு ஒரு வெயிட்டேஜ் முறை, 2013 தேர்விற்குமற்றொரு வெயிட்டேஜ் முறை என்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே தோன்றுகிறது.

7. 10 வருடங்களுக்கு முன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவது மிகவும் தவறான ஒன்று. வெயிட்டேஜ் முறை ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை ஏமாற்றும் செயல். 1980 - களில் இருந்து 2014ஆம் ஆண்டுகள் வரை கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறை போன்றவை ஒரே மாதிரியாக உள்ளதா? 1980 -ஆம் வருடங்களில் +2, கல்லூரி படிப்பும், 2000 ஆண்டிற்கு பின்பு உள்ள +2, கல்லூரி படிப்பும் ஒன்றுக்கொன்று நிகராணவையா? ஒரே மாதிரியானவையா? இதனை கேட்டால் தரமான ஆசிரியர்களை உருவாக்குவோம், என்று ஒரு போலித்தனமான பதில்கூறப்படுகிறது.

8.PG TRB-க்கும், +2 -விற்கு 10 மதிப்பெண், பி.எட்-க்கு 10 மதிப்பெண், UG க்கு 10 மதிப்பெண், PG க்கு 10 மதிப்பெண் என்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் என்று வெயிட்டேஜ் முறையை கடைபிடித்தால் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் தகுதியான மற்றும் தரமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

9. முன்பு படித்த படிப்பிற்கு பணி வழங்குவது,
1. திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை செய்வது போல் இருக்கிறது. வரதட்சணை (வெயிட்டேஜ்) வாங்குவது குற்றம்.
2. ஒருவன் பிறக்கும் போதே ஆசிரியராக பணி செய்ய வரம் பெற்று பிறந்திருக்க வேண்டும் என்று படித்தவர்களை பார்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்பதுபோல இருக்கிறது இந்த வெயிட்டேஜ் முறை. இது சரிதானா?

10. இளங்கலை பட்டம் முடித்து பி.எட் சேர்வதற்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது இன்றைய முதல்வர்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது அவற்றிற்கு வெயிட்டேஜ் முறை பின்பற்றுவது நியாயம் தானா?

11. என் டெட் மதிப்பெண்93, +2 mark 747, UGமதிப்பெண் சதவீதம் 49.00%பி.எட் 75% டெட் வெயிட்டேஜ் 62.2%. தற்போது பணி பெற சற்றும் வாய்ப்பற்ற என்னை போன்ற பல பட்டதாரிகளின் நிலைதான் என்ன?

12. வெயிட்டேஜ் முறையால்+2, UG,மதிப்பெண் குறைவாக உள்ள என்போன்ற பட்டதாரிகள் என்றுமே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? மீண்டும் +2, இளங்கலை பட்ட மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லாத போது டெட் தேர்வில் பல மதிப்பெண் அதிகமாக பெற்றால்தான் வெயிட்டேஜ் மதிப்பெண் 1 அல்லது 2 கூடும், இப்படிப்பட்ட சூழலில் எத்தனை முறைதான் டெட் தேர்வு எழுதுவது?

13. டெட் தேர்வில் முதலில் குறிப்பிட்ட தகுதி (90 மதிப்பெண் மற்றும் அதற்குமேல்) மதிப்பெண் பெற்றும் வேலை வாய்பை இழந்த பலரின் நிலைபற்றி எந்த நீதிவான்களும் யோசிக்காமல் போனதன் காரணம் என்ன?

14. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 10+2+3+1 என்ற வரிசை அமைப்பில் படித்தால் போதும் என்றுதான் நினைத்தோம், ஆனால் மீண்டும் மீண்டும் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பலமுறை படிக்க வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளதை இப்போதுதான் பலர் உணர்கிறோம். இதுதான் கல்வியாளர்களின் சாதனையா?

15. இந்த டெட் தேர்வில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை இழந்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் அறியுமா? தேர்விற்கு முன்பே தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றிருப்பார்கள் அல்லவா? இவர்களின் நிலைதான் என்ன? 2014-2015 ஆம் கல்விஆண்டு துவங்குவதற்கு முன்பாக பணி நியமனம் பற்றிய அறிவிப்பு விடாமல் இருந்தது பலரின் வாழ்வை அழித்துள்ளது.

16. மேலும் பலர் என்னை போன்று மேல்படிப்பை இழந்து இருக்க மாட்டார்கள், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்PG, M.Phil சேர்க்கை தவிர்க்காமல் இருந்திருப்பார்கள், இதுபோன்றோரின் வாழ்விற்கு அரசால் பதில் கூற முடியுமா?

17. இந்த டெட் தேர்வால் பலரின் வாழ்வில் ஒளி வந்ததைவிட வயிறு பற்றி எரிந்ததுதான் அதிகம். இங்கே மனிதாபிமானம் காக்கப்படுகிறதா?

18. ஒவ்வொரு முறையும் எத்தனை புத்தங்களை தான் படிப்பது, ஒரு அறிவியல் அல்லது கணிதம் படித்த தேர்வர் எத்தனை புத்தகங்களை படிப்பது என்று இந்த அரசிற்கும், கல்வியாளர்களுக்கும் தெரியுமா? உளவியல் அடிப்படையில் படித்தால் ஒவ்வொரு மனிதனின் அறிவும், நுண்ணறிவும் 16 வயதில் நின்றுவிடும் என்பதை கல்வியாளர்கள் மறந்து விட்டார்களா?

19. மாணவர்கள் மனநிலையை ஆசிரியர் அறிய உளவியல் பாடத்திட்டம் உள்ளதை போல ஆசிரியர்களின் மனநிலையை அறிந்துகொள்ள அரசாங்கம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றிற்கு ஏதாவது புதிய பாடத்திட்டம், புத்தகம் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு கல்வியாளர்களின் பதில் என்ன?

20. இதன் மூலம் என்னை போல எத்தனைபேர் மன உலைச்சல் பெற்று வாழ்வை இழந்து வருந்துகிறார்கள் என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?

21. என்னைபோல பலருக்கு மனித உரிமை மீறலுக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்திருக்கும்.

22. மனித உரிமை மீறல் மற்றும் மன உலைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தோன்றுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா?

தமிழக அரசு, கல்வித்துறை, கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் -இவர்களை கேட்கிறேன்.

1. ஒரு தேர்வின் மூலம் பணிவழங்குவதாக இருந்தால் அரசாங்கம் அதற்காண அறிவிப்பின்போதே காலிப்பணியிடங்கள், அதற்கான தகுதி, எதன் அடிப்படையில் தேர்வர்கள் பணிநியமிக்கப்படுவார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிவித்த பின்னரே தேர்வை நடத்த வேண்டும் அல்லவா? அதை கடைப்பிடிப்பதுதான் சரியான முறையல்லவா? நடந்து முடிந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னர் சலுகை வழங்குவதும், தேர்வு செய்யும் முறையை மாற்றுவதும் சட்டப்படி சரிதானா?

2. தேர்வின் வினாக்களுக்கு விடையை வெளியிடுவதில்தான் எத்தனை சிக்கல்,எத்தனை முறை மாற்றியமைத்தல் நடைபெறுகிறது, இதன் காரணம்தான் என்ன? வினா, விடை வழங்கிட அரசாங்கம் தேர்வுக்குழு அமைத்தும் ஏன் இத்தனை குழப்பம்? சரியான விடை எது என்று தேர்வு குழுவிற்கே தெரியவில்லை போலும், தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர்தான் தேர்வுகுழு - வினாவிற்கான விடையை தெரிந்துகொள்கின்றன.

3. டெட்Syllabusபற்றி ஒரு கேள்வி :டெட்தேர்வில் B.ScMaths அல்லதுB.Sc Physics படித்த தேர்வர் ஏன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உளவியல் படிக்க வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று தனித்தனி ஆசிரியர்கள் எதற்கு நியமிக்கப்படுகிறார்;கள்? ஒரு ஆசிரியர் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கும் ஒரு கேள்வி எழுகிறது என் மனதில், அறிவியல் அல்லது கணிதம் படித்த ஆசிரியருக்கு சமூக அறிவியல் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் சரியா?முறையா? ஒரு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது வரலாறு படித்த ஆசிரியர் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு இல்லாமல் இருந்தால் சரியா? முறையா? ஒரு ஆசிரியர் எல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது அனைத்து பட்டதாரிகளும் டெட் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களையும் படிப்பதுதானே மிகவும் சரி?

4. டெட் தேர்வை இவ்வாறு நடத்தும் அரசாங்கம் மேல் படிப்பு என்று சொல்லப்படும்B.Sc, M.Scபோன்ற பட்டப்படிப்புகளில் அனைத்து பாடங்களையும் பாடதிட்டமாக அமைக்க வேண்டும் அல்லவா?

5. டெட் தேர்விற்கு மட்டும் +2,UGபோன்ற கல்விகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு பணி வழங்கும் முறையை கடைபிடிக்கும் அரசுPG, TRB,TNPSCபோன்ற தேர்வுகளின் மூலம் வழங்கும் அனைத்து பணிகளுக்கும் இந்த முறையை கடைபிடிப்பதுதான் நியாயமான செயல் ஆகும்.ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணியையும், வாழ்க்கையையும் இழந்து துடிக்கும் இந்நேரத்தில் என்னுடைய இந்த கண்ணீர் கட்டுரையை படிக்கும் அனைத்து டெட் தேர்வர்களுக்கும்

நன்றி!

இப்படிக்கு,
திரு. Thirumavalavan Gautham,
வேலையில்லா பட்டதாரி!

88 comments:

  1. சூப்பரப்பூ Golden words cannot repeat

    ReplyDelete
    Replies
    1. அதே போல் தமிழில் b,a b,ed,, ku முன்னுரிமை கொடுக்க வேண்டும் sec,gradewith b,lit. க்கு ஏங்களுக்கு அப்பறம் தான் கொடுக்க வேண்டும்

      Delete
    2. I PRAY TO GOD. All the best. Thiruma

      Delete
    3. மிக அருமையாக சொன்னீா்கள்... நண்பரே...

      Delete
    4. திரு. திருமாவளவன் அவர்களுக்கு அரசின் இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிரான நமது குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். அப்போது தான் பிரச்சனை என்னவென்று அவர்களுக்கு புரியும். உங்களின் எழுத்துக்களில் உங்களின் மன வேதனையை உணரமுடிகிறது. இந்த கட்டுரை அனைத்து பேப்பர் மற்றும் மீடியாக்களுக்கு மெயில் அனுப்பவும். மீடியாவில் வெளிவந்தால்தான் அனை வருக்கும் இதில் உள்ள பிரச்சனை தெரியவரும். கல்விசெய்தி நண்பர்கள் அனைவரும் செய்யவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

      Delete
    5. thiru palani ganesh,
      nenga b.ed., oruvarusham. nanga sec.ed renduvarusham, athumattumalla ippo engalla nirayaper p.g with b.ed., t.p.t., muduchittom.

      Delete
    6. @ the time of slab method ,academic low weightage vangiyavargal patri yarum kavalapadala ...
      because # pathippu illai..
      @ the time of scientific method , low weightage ullavargalai patri #group il ulla palar kavalapadala...
      coz * pathippu illai
      #group il ulla silar mattum vunna viratham irunthanga...
      @ the time of vacancy list anounced,low weightage ullavargal patri *group il ulla palar kavalapadala...
      *group il ulla silar mattum pettion podalama case podalamanu yosikkiranga!!!

      Delete
    7. * is the subset of #
      who is the subset of * ?
      wait and see the changes of selection method...

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Good article sir yengalai pol pathikkapattavarkalin kuralaga olikkirathu intha article.

      Delete
    10. Gautham... Ungalin mana unarugalai ennal unara mudigirathu....

      Endru vidiyum Ungalin Kelvikalukku Theervu... ?

      Andru than Jananayagam pirakkum....in tha Nattil !

      Delete
  2. thirumavalavan sir
    enge poi neethi ketpathu endru theriyamal manathukul azhuthu kondu irukiren

    ReplyDelete
  3. en tet mark 99/150. but weightage mark 63.4. velai kidaika vaipillatha nan marupadium tet exam ku padipathai ninathu kuda parka mudiyavillai sir

    ReplyDelete
    Replies
    1. I am secured weightage is 63.68. Tamil BT (MBC). Is it possible to get the job.

      Delete
  4. Good Article sir...!
    I know ur pain...

    ReplyDelete
  5. +2 மார்க்க மட்டும் நீக்க வேண்டும் என சொன்ன சுயநலவாதி யாருடா ? இவ்வளவு நாள் எந்த ஊர்ல நீ ஒளிந்துகொண்டிருந்த ?
    10 வருடங்களுக்கு முன் degree படித்தவங்கலாம் இல்லியா ?
    10 வருடங்களுக்கு முன் bed படித்தவங்கலாம் இல்லியா ?

    ReplyDelete
  6. Very good article idai Sinanthropus kalviyalarkalidam eduththu Sollave vend un

    ReplyDelete
  7. ithallam yosithu partahngana nama ipdi polampanumnu avasiyame illa Sir,, gvt sutha waste athu arasiyalvaathigalin kaiyil ullathu not in our hand entha sattathai eppo podanumnu oru sattam kondu varanum pola intha ..... galuku ...

    ReplyDelete
  8. Sorry Mr Thirumalavan Gowtham.

    The article was very painful. Yet now I don't find any consolation word to convince you. Although the world is wide. You are born to taste the victory always as sky is your limit. I wish you all success wherever you enter.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ஒரு நல்ல ஆசிரியாரால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்
    ஒரு நல்ல ஆசிரியரை தீவிரவாதியாக இந்த அரசியல் உருவாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது

    எத்தனையோ ஆசிரியர்களின் கனவை கலைக்காதிர்கள்

    PG TRB போல் ஒரு பொதுவான தேர்வு தேவை

    இல்லையெனில் எத்தனை ஆசிரியர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று தெரியாது

    அரசாங்கமே இப்பொழுதே திருத்திகொள்ளுங்கள் இல்லையெனில்
    இது மிக பெரிய வன்முறை மிகுந்த மாநிலமாக மாறக்கூடும்

    தீவிரவாதிகள் உருவாகுவதில்லை உருவாக்கபடுகிறார்கள்

    ஆம் படித்த தீவிரவாதிகள் உருவானால் இந்த சமுகம் தாங்காது

    ஆம் விரக்தியில் இவ்வாறு தவறான பாதையில் சென்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது



    ReplyDelete
  11. Selvi ShanmugamJuly 24, 2014 at 10:54 AM
    உங்களுக்கு கால் மட்டும் தான் இருக்கா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இது என்ன புகைப்படம் madam?

      எத்தனையோ மதிக்கத் தக்க படங்கள் இருக்கின்ற பொழுது இதை வைப்பதற்கான அவசியம் என்ன?

      இந்த புகைப்படத்தின் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன?

      Delete
    3. Pls selvi shsnmugam sister or brother pls change your profile picture........ It is my kindly request

      Delete
    4. அட கடவுளே இதுக்கு கூட kind request வைக்கணுமா? நல்லது.

      Delete
    5. மற்றவரின் சுதந்திரம் பறிப்பதில் என்ன ஒரு ஆனந்தம்


      நானும் வருகிறேன் இந்த ஆண்களின் மேலோங்கிய பார்வைக்கு Remove the picture

      [ஆங்கிலம் பேசினாலே சுதந்திரம் பறிக்கும் எண்ணம் தோன்றிவிடும் போலும் ]

      Delete
    6. பாதத்தை படமாக வைப்பதுதான் உங்கள் சுதந்திரம் என்றால் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள்.

      பெண்களின் சுதந்திரம் எதில் இருக்கிறது தெரியுமா?

      ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களுக்கும் அமெரிக்க நாட்டு பெண்களுக்கும் இடையில் இருக்கிறது சுதந்திரம்.

      பெண்ணாகிய உங்களின் அந்த புகைப்படம் எவ்வளவு சர்ச்சையை உருவாக்குகிறது தெரியுமா?

      android uc browser mini யில் கல்விசெய்தியை பார்க்கும் பொழுது உங்களின் காலிற்கு கீழேதான் அனைத்தும் இருப்பது போல் தெரிகிறது.

      அந்த புகைப்படம் நீங்கள் சற்று தலைக்கணம் பிடித்தவர் என்பதை உணர்த்துவது போல் இருக்கிறது. அப்படி பட்ட ஒரு அடையாளம் உங்களுக்குத் தேவையா?

      எதுக்குமே கோபப்படாமல் மரம் மாதிரி இருக்க நான் இன்ப,துன்பங்களை வெறுத்த முனிவன் கிடையாது.சராசரி மனிதனுக்கு கோவம் வரும்.அதனால் எனக்கும் வந்தது. ஒருவேளை அப்படி வராவில்லையென்றால் அவர் நடிக்கிறார் என்று பொருள். எனக்கு நடிக்க தெரியாது.

      என் மனதில் பட்டதை நான் சொன்னேன்.அதற்காக அதை நீங்கள் கட்டாயம் மாற்றித்தான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

      Delete
    7. lastla a na keta kelvikku pathil innum varala Rajalingam & Maniyarasan Sir,.... Velaya thavira ellam panranga intha trb um sari gvt um sari

      Delete
    8. inga namaku patrimantram vaikkala irukkara prachanaila ithu veraya omg

      Delete
    9. Ellam ungalal vantha vinai Mr.Prapha karan

      Delete
    10. நல்லவர்கள் முடிந்து போனதைப் பற்றி பேசமாட்டார்கள்.......

      Delete
  12. திருமாவேலன் கவுதம் உங்களுடைய போன் நம்பர் ப்ளிஸ் , என்னுடைய போன் நம்பர் 9843197957

    ReplyDelete
  13. I passed TET 2012, major sub chemistry. tet marks 106. Now weightage 71.36. option language malayalam. When will be appointed linguistic minority candidates? Ofcourse no replies will be there from any kalviseithi friends. Because I have no strenghth. I belong to OC. no relaxation. Very high marks. but no job. No MLA for OC and linguistic minority. Nan tamil vazhiyil karkavillai. Nan SC aka pirakkavillai.Schoollile admission pottathilirunthu nalla padichen. athu mattum than nan cheynja thavaru. I have been waiting for 2 years. Neethi enakku mattum illaya.

    My wife also passed TET 2012. Mathematics.She also didnt get job. reason mele chonnathu than. Nankala vanthu OC aka pirakkavillai. En Appa Amma OC. Athukku nankalukku onnum panna mudiyathu.Woman ake pirakkathathinale woman quota vum kidakkathu. Oru manithan pirantha vithathte vaithu velai kuduppathu seriya. pirantha piraku edukkum muyarchikku thane mathippu vazhanka vendum?Oda chonnen. Odinen. Muthalidathukkum vanthen. Anal parisu illai. Varuthathile chonnen.Yarukkavathu manasu vethanai pattirunthal mannikkavum. 2 kulainthakal ulla nan valva , chava enkira situationile irukkiren. pls reply

    ReplyDelete
    Replies
    1. Dear Manikandan Sankaranarayanan Nair, I share your feeling. You and your wife will get job very soon. don't loose your hope. God is our side.

      Delete
  14. PAPER 1 TOTAL 938 THAN ENDRAL YERKANAVE 2012 TET PAPER1 538 WAITING SO 938 - 538= 400 POSTING ONLY FOR 2013 TET APARAM ENNA ITHUKU DA EXAM VACHEENGA PONGADA NEEENGALUM UNGA TET YUM OK BYE THIS MY LAST CMT IN THE SITE

    ReplyDelete
    Replies
    1. institute a first close pannanum intha gvt

      Delete
  15. TET is a one of the good method of selecting Teaching post In TET exam internally there are five subjects in Paper 2 there are (Psychology, Tamil, English,Science&Maths / History & geography) In this pattern we should get more than 82 and above(out of 150) only we are qualified to select for teaching post. But in this method there are so many confusion are there

    1. One Tamil teacher he is going to select as a Tamil Teacher. He scored more than 82 overall in TET exam but he scored in Tamil subject very less mark (for example less than 10) How he is going to teach Tamil?. Is he a qualified Tamil Teacher?

    2. One English Teacher he is going to select as a English Teacher he also overall scored more than 82 but he scored in English subject very less. He cannot reach the minimum 50% of marks in his subject. How he is going to teach English? Is he a qualified English Teacher?

    3. One Science Teacher he is going to select in Science (Physics/Chemistry/Botany /Zoology) in his subject he scored very less. He cannot reach the minimum 50% of marks in his subject. But overall he scored more than 82.How he is going to teach Science subject? Is he a qualified Science Teacher?

    4. One Maths teacher he is going to select in maths. He scored very less marks in maths subject he cannot reach the minimum 50% of marks his subject. But overall he scored more than 82. How he is going teach Maths? Is he a qualified maths teacher?

    5. One Social teacher he is going to select in Social subject. He scored very less marks in social subject he cannot reach minimum of 50% in his subject. But overall he scored more than 82. How he is going to teach Social? Is he a qualified Social teacher?

    Note: These all are my personal opinion. If someone hurt please ignore the comment.

    ReplyDelete
    Replies
    1. The status of the candidates continuously increase not decrease hence one who score 50% in ug he improve in msc 75% and he may well versed in his subject in future so there is lot different between growth and development.

      Delete
    2. then why Govt. calculating the +2,UG and BEd marks?

      Delete
  16. உங்களின் மன வேதனை அளவிடவே முடியாது. உங்களின் வேதனையில் பங்கெடுப்பதை தவிர வேறென்ன இயலும் pap1 நண்பர்களும் நிர்கதியாய் உள்ளோம்

    ReplyDelete
    Replies
    1. hi elanjera sir sg 938 nu conform ayuduchu.......

      so na private job thedi poga decide paniten.......

      enimale govt job enaku vendavae venam...........

      my weitage 74.................

      evlo nal ellarum unaku job kedachudum nu sonanga

      epo kedaika porathu elainu ayuduchu............

      goodd bye to allllllllllllllllllllllllllllllllllllllllll

      Delete
    2. நமது மன வேதனை மரண வேதனை ஆகிவிட்டது நண்பா. உமக்கு நானும். எனக்கு நீங்களும் தான் ஆறுதல் நண்பரே. கேடு கெட்ட அரசியல் வாதிகளுக்கு நாம் விடும் சாபம் அவர்களுக்கு புரிய வைப்போம் சார்

      Delete
    3. Muyarchi eduppom sir...don't feel

      Delete
  17. மிகவும் வேதனையாக உள்ளது. I am paper 1 wt 73.18 mbc. but no job....

    ReplyDelete
  18. தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?
    வியாழன், ஜூலை 24, 2014 - விடுதலை பத்திாிக்கையில் வெளியாகி உள்ள செய்தியை பதிவிடுமாறு கல்விசெய்தியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  19. 90 iruku Mel mark eduthu wtg la pathikkapattavanga manager vadhanaiya alaga sollitinga. Annum tetla 92mark but wtg 59.11 so yanakum vaippu illa. KLast a party padichi tet la mark eduthutan. INI +2 .ug thirupi padichutu vanu sollranga Yenna seiya namma kannera pakka all um illa nithipathiyum illa.

    ReplyDelete
  20. திரும்ப திரும்ப TET தேர்வை நியாய படுத்தி பேசும் சில நபர்கள் இருக்கும் வரை இந்த மரண வேதனை தொடரும் திருமாவளவன் ...........

    ReplyDelete
  21. Hello thiru gautham sir
    Pls give your contact details.

    ReplyDelete
    Replies
    1. Onru kuduoom ...
      Poraduvom .....
      Sagum varai ...

      Delete
  22. Vellore District 5 % MBC English.....
    58202188 51.9
    57200992 54.14
    58203713 55.02
    57204761 55.14
    57200748 55.33
    58207318 55.34
    57205712 55.39
    58204010 55.5
    58203834 55.51
    58203317 55.73
    58210435 55.79
    57200829 56.04
    58210137 56.12
    57201102 56.26
    58209770 56.39
    57204266 56.39
    57201610 56.4
    57205946 56.68
    57206063 56.69
    57201428 56.76
    57200700 56.92
    58212087 56.96
    57204612 57.11
    57205328 57.2
    58208348 57.23
    58201004 57.53
    57203362 57.54
    58210482 57.78
    58203361 57.85
    58202612 57.94
    58206863 58
    58202609 58.06
    57201244 58.09
    57204559 58.14
    57205787 58.21
    57203346 58.25
    58213375 58.44
    57203514 58.45
    57205181 58.61
    58213450 58.64
    57202135 58.66
    57205842 58.68
    57201120 58.78
    58202939 58.85
    57201206 58.86
    58204883 58.88
    58212968 58.89
    57206443 59.03
    58209479 59.15
    57203400 59.18
    58201789 59.2
    57200760 59.25
    57202997 59.26
    57200315 59.36
    58203612 59.39
    58201838 59.42
    57204045 59.6
    57201853 59.66
    57203739 59.84
    57204853 59.95
    57201554 60.11
    57200557 60.13
    58201822 60.25
    58208323 60.26
    58212152 60.36
    57206187 60.4
    57202340 60.53
    58203352 60.53
    57203678 60.54
    57201398 60.69
    57201341 60.7
    57206287 60.97
    58202027 60.99
    57204439 61.04
    58203297 61.06
    57205549 61.08
    57204792 61.14
    57206090 61.2
    57204652 61.32
    58209474 61.36
    57202504 61.37
    57204667 61.4
    57206318 61.42
    58211859 61.46
    57206047 61.77
    57201724 61.82
    58207321 61.83
    57200391 61.83
    58213268 61.87
    58204755 62.14
    57201373 62.29
    57206230 62.98
    58208698 62.98
    58208441 63
    58210548 63.18
    57205585 63.3
    58202954 64.1
    58204030 64.16
    58202582 64.51
    57202451 65.1
    58205957 abscent

    ReplyDelete
  23. Selvi ShanmugamJuly 24, 2014 at 2:23 PM
    நான் உங்களை எதுவும் தப்பா சொல்லலயே
    பிறக்கும் போதே நாம் எல்லா விஷயங்களும் கற்றுக் கொள்வதில்லை , தானே கற்பது , பிறர் சொல்லி தெரிவது, பெற்றோர் , ஆசிரியர் , போன்ற பல.
    பின்பற்றுவதும் திருந்தாததும் உங்கள் குணம் .
    உங்கள் கால் படத்தை விட குழந்தை படம் அழகு .
    மணியரசன் சொன்னது போல் நான் uc mini browser தான் பயன் படுத்துகிறேன் அதனால் தான் நான் இதை கூறினேன் மற்றபடி உங்களுக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகறாரும் இல்லை .

    ReplyDelete
    Replies
    1. Haiyo Rama oru picture ku intha akka pora

      Delete
  24. Mr thirumavalavan sir,
    Yeanakkum ungal nilamai than! My marks in TET 93, +2 - 792, UG- 48.7, Bed- 76% my wtge 62.56 mbc female bt job illa! 1 month baby ya vachunu nan padichean! But yen kastathukku palan illama pochu! Job illana yen lifea poidum! Yenna panurathunnea yeanaku thearila sir........

    ReplyDelete
    Replies
    1. சக்தி நீங்கள் எந்த பாடப்பிரிவு

      Delete
    2. MY TET MARK IS 100 BUT NO JOB WHAT CAN I DO

      Delete
    3. நாண் என் பையனை I C U. ல admit பன்னிட்டு hospital ல
      வைத்து 1 மாதம் படித்தேன் .
      மனைவி குழந்தையை பிரிந்து 8 மாதம் படித்து 100
      மார்க் BUT NO JOB
      13TE15204131

      Delete
    4. Pls mention ur wtg caste and sub

      Delete
  25. திரு. திருமாவளவன் அவர்களுக்கு அரசின் இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிரான நமது ஓங்கி ஒலிக்கவேண்டும். அப்போது தான் பிரச்சனை என்னவென்று அவர்களுக்கு புரியும். உங்களின் எழுத்துக்களில் உங்களின் மன வேதனையை உணரமுடிகிறது. இந்த கட்டுரை அனைத்து பேப்பர் மற்றும் மீடியாக்களுக்கு மெயில் அனுப்பவும். மீடியாவில் வெளிவந்தால்தான் அனை வருக்கும் இதில் உள்ள பிரச்சனை தெரியவரும். கல்விசெய்தி நண்பர்கள் அனைவரும் செய்யவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த புலம்பல்களுக்கு காரணம் 5% தளர்வு மட்டுமே இதில் நானும் பதிக்கப்பட்டுள்ளேன்

      Delete
    2. Weightage method thaan mr.arun

      Delete
  26. I also. We have to do something.Take steps immediately. I will join with you . My wgt is 62.58. tet 92 maths. age 43

    ReplyDelete
  27. EVERYTHING IS PROBLEM !!!
    If amma's style is followed, seniors are affected much.what to do???

    EVERYTHING IS PROBLEM !!!
    If karunanithi's style is followed, we get the job at the age of 55 years. Because 4,00,000 B.Ed are waiting.......

    EVERYTHING IS PROBLEM !!!
    If seniority weightage is given, seniors only be getting job, juniors will get less chance !!!
    EVERYTHING IS PROBLEM !!!
    Even though U.G TRB is intoduced , competition is so high. Because, 4,00,000 b.ed students are there in Tamil nadu. Every year 65,000 fresh b.ed candidates are coming out.

    ReplyDelete
    Replies
    1. So, better to follow TET marks. Next tet should be conducted after all 2013 tet passed candidates will get the job. This is a best way. All will get the job.

      Delete
  28. Ingu thatti kettalum niyayam yarukkum kidaikka povathillai endru yellorum arinthathe, irupinum ennudaya kastangalaiyum kelvigalayum yaridamaavathu pagira munaindhen en unarvugalukku vaaipalitha kalviseithhi mattrum padasalai amaippugalukku mikka nandri

    ReplyDelete
    Replies
    1. Hello sir Pls organise the people we file the case.pls send your no

      Delete
    2. கவி வைரமுத்துவின் சில வரிகள்.

      விடியாத இரவென்று எதுவுமில்லை......
      முடியாத துயரென்று எதுவுமில்லை......
      வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை......

      Delete
    3. Nambikkaiyana varigalai pagirvatharkku ALEXANDER avargalukku nandri

      Delete
  29. g mannikavum nanum pathikka pattavanthan but ithellam therinthuthan naam exam eluthinom but ipp namakku kidaikkalanu varuthapaduvathu entha vithathil niyayam (iam also). ithu eppadi pothu nalamagum? pass panna 74000 perukkum velai entral intha methodai ethirpoma? appo naam pathikka padum pothuthan pothunalam entra porvail suyanalamai yosikkirom? pothunalam entral appothe intha methodai ethirthirukka vendum ean ethirkavillai exam eluthi irukka kudathu ean eluthinom? yarudaiya thavaru ithu? nammudaiya thavarethan karanam asai

    ReplyDelete
    Replies
    1. ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு வியாதி சரியாக 6 மாதத்திற்க்கு மருந்து எழுதிக்கொடுக்கிறார். வியாதிஸ்தரும் அந்த மருந்தை காலம் தவறாமல் மருந்து சாப்பிட்டும் அந்த வியாதி குணமாகவில்லை. அப்போது மருத்துவரிடம் சென்று கேட்டால், மருத்துவர் சொல்கிறார் ‘அய்யய்யோ இந்த மருந்துக்கு பதிலாக வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் தான் குணமாகும் என்று வேறு ஒரு மருந்தை எழுதிக்கொடுத்தால்’. இது மருத்துவரின் குற்றமா??? அல்லது வியாதிஸ்தரின் குற்றமா?????

      Delete
    2. இருவரின் குற்றமும் இல்லை !!வீணாக வந்த நோயின் குற்றம் தான் சார்...

      Delete
    3. sir 5% relaxation therintha eluthinom exam.
      938 vacant enna therinthu eluthinoma exam.
      one year agum process ena therinthu eluthinoma exam.

      Delete
    4. vandila poren vipathu akividuthu so, vipathu akiviumnu therinja nan vandila ponen no that is accident. next theriyamal (notification vidamal) eluthiyathu nam thavaruthane intraikku etharkeduyhalum case podum nanbarkale andraikku unkalukk theriyavillaiya unkalukku pathippa illaiya entru? intraikku vaipu kuraivu( 74000 including) entravudan thane ivvalavu kovamum case um so namakkum arasiyal vathikkum namakkum enna vithyasam nanbarea? mudinthal pathilidunkal Mr.soloman , sathees mani , rajalinkam avarkalea.............,

      Delete
  30. 5% relaxation varumnu nano neenkalo ninaikka villai but oruvelai intha 74000 perum 90 above eduthiruntha enna pannuvom? g intha relaxation kodutha vudane naam enna panninom? inke kandanamum thamathu varuthathaium pathivittom intha relaxation vendum entru andraikkea ithe arasiyalvathikal vathittanar enbathum nammudaiya gnabakahil irukka vendiyathuthan. naam anaivarum ontrai maranthu vidukirom athuthan unmai. ivarkal anaivarum arasiyalvathikal oru varudamaka posting pathi pesama (( arikkai kooda) irunthathan nokkam enna nanba?

    ReplyDelete
  31. Hello Mr. Gautham
    Pls give your contact details.
    R send the mail to my I'd balajigireesan@gmail.com. We take immediate action.

    ReplyDelete
  32. thiru.gautham1987@gmail.com
    i dont have any plan to file a case against any one, i think my points are mat use those who file case

    ReplyDelete
  33. Mr. thirumavalavan gautham sir, your article is very good and 100% correct. If it will be published in any other news paper surely, it will get 100% benefit to the tet candidates. Please do it sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி